மழைநீர் ஒழுகுகிறது.. இதுதான் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சா?.. பயணிக்கு இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அல்ட்ரா டீலக்ஸ் பயணத்திற்கு பணம் வசூலித்துவிட்டு மழை நீர் வழிந்த, இருக்கை சரியில்லாத பேருந்தில் பயணிக்க வைத்ததற்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு வருவதற்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் மட்டும் இன்றி நடுத்தர மக்களும் அதிகம் விரும்புவது அரசு பேருந்துகளாகத்தான் இருக்க முடியும்.

அல்ட்ரா டீலக்ஸ் சொகுசு பேருந்துகள்

அல்ட்ரா டீலக்ஸ் சொகுசு பேருந்துகள்

பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு வகையான பேருந்துகளை இயக்கி வருகிறது. விரைவுப்பேருந்து, அல்ட்ரா டீலக்ஸ் சொகுசு பேருந்துகள், ஏசி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதை காண முடியும்.

தனியார் பேருந்துகளுக்கு நிகராக

தனியார் பேருந்துகளுக்கு நிகராக

தனியாருக்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அரசு போக்குவரத்து கழகமும் பேருந்தை இயக்கி வந்தாலும் சில சமயங்களில் அரசுப்பேருந்துகளில் போதிய பராமரிப்பு இன்றி ஓட்டை உடைசல் பேருந்துகளும் தொலை தூரங்களுக்கு இயக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு இல்லாமல் இல்லை. முறையான பராமரிப்பு இல்லாவிட்டால் மழை நேரங்களில் பேருந்து பயணம் என்றால் பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி விடும். அவ்வப்போது பேருந்துகளுக்குள் மழை நீர் வடிவதாக பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால்

பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால்

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்கான இழப்பீட்டையும் பெற்றுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:- சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.சேமசுந்தரம் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் பயணம் செய்ய 2 ஆயிரத்து 926 ரூபாய்க்கு அரசு போக்குவரத்து கழகத்தின் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் முன்பதிவு செய்துள்ளார்.

நுகர்வோர் நீதிமன்றம்

நுகர்வோர் நீதிமன்றம்

அவர்கள் பயணித்தபோது மழை பெய்ததால் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதுடன், இருக்கைகளும் சேதமடைந்து இருந்ததாகவும், மதுரையிலிருந்து கொடுக்கப்பட்ட பேருந்திலும் இருக்கைகள் சரியில்லை என்றும் கூறி ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நாகப்பட்டிணம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, தலைவர் தட்சினாமூர்த்தி, உறுப்பினர்கள் கமல்நாத், செந்தமிழ் செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இழப்பீடு வழங்க உத்தரவு

இழப்பீடு வழங்க உத்தரவு

பின்னர் அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில், சோமசுந்தரம் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய், அல்ட்ரா டீல்க்ஸ் பயணத்திற்கு செலுத்திய கட்டணத் தொகை 2 ஆயிரத்து 926 ரூபாய் ஆகியவற்றை சேர்த்து 62 ஆயிரத்து 926 ரூபாயை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+