இதோ வந்துட்டங்கய்யா.. ராஜராஜ சோழன் தேவரா? வன்னியரா? நாடாரா? உரிமைகோரி 8 சாதி அமைப்புகள் போஸ்டர்
சென்னை: பேரரசர் ராஜராஜ சோழனின் சதயவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் வாழ்த்து என்ற பெயரில் வெவ்வேறு சாதி சங்கங்கள் அவரை உரிமைகொண்டாடி போஸ்டர், பேனர்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் ஏதாவது ஒரு சாதனை புரிந்துவிட்டாலோ அல்லது சர்ச்சையில் சிக்கினாலோ, வரலாற்று புகழ்பெற்றவராக இருந்தாலோ அவரை சாதி ரீதியாக பார்த்து பெருமைப்படுத்துவதும், இழிவுபடுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.
பொதுவாக பெயர்களை வைத்து மதம் என்னவென்று கண்டுபிடித்துவிட முடியும். அதுவே வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றால் பெயருக்கு பின்னால் உள்ள சாதியை பெயரை வைத்து அறிந்துகொள்வார்கள்.

தமிழ்நாட்டில் சாதி
வட மாநிலங்களில் பெரும்பாலான மன்னர்களின் பெயர்களை வைத்தே சாதியை கண்டுபிடித்து அவரை சாதி தலைவராக்கிவிடும் அவலமும் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்டுக்கொள்வது இல்லை. இடைக்காலத்தில் அந்த பழக்கம் இருந்தாலும், பண்டைய காலங்களிலும் சாதி பெயரை சேர்க்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.

மன்னர்களின் சாதி
முற்காலத்தில் தமிழ்நாட்டில் சாதியே இல்லை என்று சொல்பவர்களும் உள்ளனர். தமிழக அகழ்வாராய்ச்சிகளிலும் சாதி இருந்ததற்கான தடயங்கள் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் பல மன்னர்களின் பெயர்களுக்கு பின்னால் சாதி அடையாளம் இல்லை. குறிப்பாக மூவேந்தர்கள் எனப்படும் சோழ, சேர, பாண்டியர்கள் பின்னால் சாதி பெயர்கள் இருந்ததில்லை.

ராஜராஜ சோழன்
இருப்பினும் அவர்களின் சாதியை அவர்கள் ஆட்சி செய்த பகுதியை வைத்து சிலர் அடையாளப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் பொன்னியில் செல்வன் பட வெளியீட்டுக்கு பிறகு ராஜராஜ சோழன் இந்துவா என்ற விவாதமும் எழுந்தது. ராஜராஜ சோழனை இந்து மன்னனாக சில சித்தரிக்க முயல்வதாக இயக்குநர் வெற்றிமாறன் பேசினார். இதற்கு ஒரு பக்கம் பலர் ஆதரவு தெரிவிக்க பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் கடும் கண்டங்களை தெரிவித்தனர்.

பிறந்தநாள்
இதற்கிடையே உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டி எழுப்பிய சோழ பேரரசர் ராஜராஜ சோழன் எனப்படும் அருண்மொழி வர்மனின் பிறந்தநாள் விழா சதயவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ராஜராஜ சோழனின் சதயவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வாழ்த்து
ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது போர்த்திறன், கட்டிடக்கலை, ஆட்சி முறை ஆகியவற்றை போற்றிப் புகழ்ந்து பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகிறார்கள். சோழனின் பெருமையை போற்றி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பேனர்கள், போஸ்டர் வைக்கப்பட்டு உள்ளன.

சாதி சங்கங்கள்
அந்த வகையில் ஏராளமான சாதி சங்கங்களும் ராஜராஜ சோழனை வாழ்த்தி போஸ்டர்கள், பேனர்களை வைத்துள்ளனர். இதில் சில சாதி சங்கங்கள் மட்டும் ராஜராஜனை தங்கள் சாதி என்று குறிப்பிடாமல் வாழ்த்து மட்டும் தெரிவித்து உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் பல முக்கிய சாதிகளின் சங்கங்களும் ராஜராஜனை தங்கள் சாதி என்று உரிமைகொண்டாடி போஸ்டர் தயாரித்துள்ளனர்.

உரிமைகோரும் சாதிகள்
ராஜராஜ சோழன் நாடார், ராஜராஜ சோழன் முத்தரையர், ராஜராஜ சோழன் உடையார், ராஜராஜ சோழன் தேவர், வன்னிய குல சத்திரிய மாமன்னர் ராஜராஜ சோழன், மாமள்ளர் ராஜராஜ சோழன், சோழ மறவன், சோழ வெள்ளாளர் என பேனர்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ராஜராஜ சோழனை சாதி, மத அடையாளத்துக்குள் சுருக்குவதைவிட அவரை தமிழினத்தின் அடையாளமாக காட்டுவதே அவருக்கு நாம் செய்யும் மரியாதை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications