Actor Rajesh: திடீர்னு என்ன ஆச்சுப்பா! நிலைகுலைந்து கதறிய ராஜேஷ் மகள்! தாங்கி பிடித்த சொந்தங்கள்
சென்னை: உடல்நிலை நன்றாக இருப்பதாக சொன்னாரே , திடீர்னு என்ன ஆனது என நடிகர் ராஜேஷின் உடலை பார்த்து அவருடைய மகள் திவ்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஒரு கட்டத்தில் தந்தையின் இறப்பால் நிலைக்குலைந்த திவ்யாவை அவருடைய உறவினர்கள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர்.
நடிகர் ராஜேஷுக்கு மனைவி சில்வியா இருந்தார். அவரும் 2012 ஆம் ஆண்டு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு காலமானார். இந்த நிலையில் சில்வியாவுக்கும் ராஜேஷுக்கும் ஒரு மகன் மகள் உள்ளனர். மகன் தீபக் சினிமாவில் நடித்து வருகிறார்.

அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. மகள் திவ்யா திருமணமாகி கனடாவில் வசித்து வருகிறார். அவருக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மகள் திவ்யா அவ்வப்போது கோடை விடுமுறைக்கு சென்னை வந்து தனது தந்தையுடன் இருப்பார் என அக்கம்பக்கம் வீட்டுக்காரர்கள் சொல்கிறார்கள்.
தனது மகள், மகன் மீது அளவுகடந்த பாசத்தை ராஜேஷ் வைத்துள்ளாராம். பேர பிள்ளைகளும் ராஜேஷ் மீது அதிக பாசமாம். இந்த நிலையில் மூச்சுத்திணறலால் ராஜேஷ் கடந்த 29ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 75.
அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிய போது அவரது மகன் தீபக் கைகளிலேயே உயிர் பிரிந்தது. இதுகுறித்து அவருடைய மகன் தீபக் செய்தியாளர்களிடம் கூறுகையில், அப்பாவுக்கு தண்ணீர் மாற்றி குடித்தால் உடனே சளி பிடித்துவிடும். இதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
அண்மையில் அப்பா துபாய் சென்று வந்த நிலையில் அவருக்கு சளி தொல்லை அதிகமாக இருந்தது. இறப்பதற்கு முன் நாள், லேசாக மூச்சுத்திணறல் இருந்தது. ஆனால் அது அதிகாலையில் அதிகரித்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸை வரவழைத்தோம்.
அவரை ஏற்றும் போது என் கையை பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். பிறகு நான் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி அவரது தலையை சரி செய்தேன். அப்போது அவரது உயிர் பிரிந்தது. எனினும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து ராஜேஷின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், இளையராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் அவருடைய மகள் திவ்யா கனடாவில் இருந்ததால் அவருடைய வருகைக்காக ராஜேஷின் உடல் எம்பார்மிங் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை கனடாவில் இருந்து மகள் திவ்யா வந்தார்.
தனது தந்தையின் உடலை பார்த்து கதறி துடித்தார். உடல்நிலை நன்றாக இருப்பதாக சொன்னாரே, திடீர்னு என்ன ஆச்சுனு தெரியலை என தந்தையின் உடலை பார்த்து திவ்யா கதறினார். மேலும் தனது குழந்தைகள் தாத்தா, தாத்தா என அழுவதாகவும் கூறினார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications