“ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்த கூடாது..” ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி!
சென்னை: திமுக மிரட்டல் காரணமாகத்தான், ரஜினி அரசியலுக்குள் வரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார். இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறது. இந்நிலையில், நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ரஜினியை மிரட்டியது திமுகதான் என்று கூறியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?
அவர் பேசியதாவது, "எம்ஜிஆருக்கு பின்னர், ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பியவர்தான் ரஜினி. தமிழக அரசியல் களத்திற்கு வந்து, சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது.
மாற்றம் வேண்டும்
அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார். ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் அந்த மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கரூர் சம்பவத்துக்குப் பின்னரும் நாங்கள் வெளியில் வந்துவிட்டோம். தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என விஜய் பயணிக்கிறார்" என்று பேசியிருந்தார்.
வாய்ப்பே இல்லை
இதற்கு திருமாவளவன் பதிலடி கொடுத்திருக்கிறார். "இது ஆதாரமில்லாத கருத்து. அவர் எந்த அடிப்படையில் இதை சொல்லியிருக்கிறார் என தெரியவில்லை. ரஜினிகாந்த், பதவி, அதிகாரம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர் அல்ல. அவர் அந்த நிலையிலிருந்து முற்றிலும் விலகி நிற்பவர். முதிர்ச்சியடைந்தவர். எனவே, அவர் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சி தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருக்க வாய்ப்பே இல்லை" என்று கூறியிருக்கிறார்.
மிரட்டலுக்கு அஞ்சி கிடையாது
முன்னதாக ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை வெளியாகியிருந்தது. அதில், "ரஜினிகாந்த் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார். மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல: தனது பலத்தை நிருபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை.
உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்
கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும். பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர். #பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி" என விமர்சிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications