"ஒரு கண் மோடி.. மறு கண் ரஜினி".. பாஜகவில் மீண்டும் ஐக்கியமானார் அர்ஜுனமூர்த்தி
சென்னை: இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜுனமூர்த்தி, பாஜகவில் மீண்டும் இணைந்தார்.
Recommended Video
தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் அண்ணாமலையை சந்தித்து அர்ஜுனமூர்த்தி பாஜகவில் இணைந்தார்.
தமிழக பாஜக அறிவு சார் பிரிவின் தலைவராக இருந்தவர் அர்ஜுனமூர்த்தி. இவர் ரஜினிக்கு நெருக்கமானவர். இந்த நிலையில் ரஜினி கடந்த 2020 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.

பாஜக
இதையடுத்து பாஜகவிலிருந்து விலகிய அர்ஜுனமூர்த்தி, ரஜினியை நேரில் சந்தித்து அவர் தொடங்கவிருக்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் அவர் ரஜினியின் தொடங்கப்படாத கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அது போல் தமிழருவி மணியன் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

உடல்நிலை பாதிப்பு
இந்த நிலையில் உடல்நிலை பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக தான் அரசியலுக்கு வர போவதில்லை, அரசியல் கட்சியை தொடங்கப் போவதுமில்லை என அறிவித்தார். ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாலும் கொரோனா பாதிப்பு எளிதில் அவரை தாக்கும் வாய்ப்பிருப்பதாலும் மருத்துவர்களும் குடும்பத்தினரும் கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதை அடுத்து ரஜினி அவ்வாறு அறிவித்ததாக தெரிவித்தனர்.

மனவேதனை
ரஜினி அரசியலுக்கு வராததால் மன வேதனை அடைந்த தமிழருவி மணியன், மாற்று அரசியல் காணும் தனது நம்பிக்கை பொய்த்து போனதாகக் கூறி இனி அரசியலுக்கே வர மாட்டேன் என பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் அர்ஜுனமூர்த்தியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இரு கண்கள்
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எனது இரு கண்களில் ஒரு கண் நரேந்திர மோடி, மறு கண் ரஜினிகாந்த். உடல்நிலை பாதிப்பால் ரஜினிகாந்த் கட்சியை தொடங்கவில்லை. நம் வீட்டில் இருக்கும் ஒருவர் உடல்நலமில்லாமல் இருந்தால் நாம் அவரை விட்டுவிட்டு எப்படி செல்வோம். எனவே நான் ரஜினியுடனேயே இருப்பேன். அது போல் பாஜகவில் சேருவது பற்றி முடிவு செய்யவில்லை என்றார்.

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலையொட்டி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் ஒரு அமைப்பை அர்ஜுனமூர்த்தி தொடங்கினார். இந்த அமைப்பல் நடிகர் கிட்டி இணைந்திருந்தார். தனது கட்சி சட்டசபை தேர்தலில் போட்டியிட ரோபோ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் கேட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென ஒரு நாள் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பாஜகவில் இணைந்தார் அர்ஜுனமூர்த்தி.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
‘துரந்தர் 2’ படத்தை பார்த்து ரஜினி போட்ட போஸ்ட்.. இயக்குனர் செய்த எதிர்பாராத சம்பவம்! குவியும் கமெண்ட்ஸ் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்!












Click it and Unblock the Notifications