சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிபிஐ- யால் ஆபத்து.. மூலிகை பெட்ரோல் ஃபார்முலாவை ஒப்படைக்கிறேன்.. ராமர் பிள்ளை பகீர்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மகள் நிஷாவிடம் புதன்கிழமை மூலிகை பெட்ரோல் ஃபார்முலா அனைத்தையும் ஒப்படைக்க உள்ளேன் எனவும் அதற்குள் சிபிஐ நபர்களால் என் உயிருக்கு ஆபத்து எனவும் மூலிகை பெட்ரோல் உற்பத்தியாளர் ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Ramar Pillai ஆதங்கம்! Mooligai Petrol Formula-வை தரப்போகிறேன் | *TamilNadu

    மூலிகை பெட்ரோல் ஃபார்முலா அனைத்தையும் தனியார் நிறுவனத்திடம் கொடுப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ராமர் பிள்ளை பேசுகையில் "நான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் மீது குற்றச்சாட்டு வைத்து சிபிஐ போலீஸார் என்னை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

    ராமர், கிருஷ்ணர் என 53 கோயில்களை இடிக்க மத்திய அரசு திட்டம்.. பாஜக இந்துக்களுக்கு எதிரானது -ஆம்ஆத்மிராமர், கிருஷ்ணர் என 53 கோயில்களை இடிக்க மத்திய அரசு திட்டம்.. பாஜக இந்துக்களுக்கு எதிரானது -ஆம்ஆத்மி

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    ஆனால் என் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாமல் என்னிடம் சிபிஐ தோற்றுப் போனது. இதனால் என்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் என்னிடம் தருவதற்கான வாதங்கள் நீதிமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

    சிபிஐ

    சிபிஐ

    சிபிஐ என்னிடம் தோற்றுப் போனதால் சிபிஐயை சேர்ந்த இரண்டு நபர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. இது மட்டுமில்லாமல் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் விவாதம் முடிந்த பிறகு புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மகள் நிஷாவிடம் என்னுடைய மூலிகை பெட்ரோல் ஃபார்முலா அனைத்தையும் ஊடகம் முன்னிலையில் தர இருக்கிறேன்.

    பெட்ரோல் டீசல் விலை குறையும்

    பெட்ரோல் டீசல் விலை குறையும்

    அதுமட்டுமில்லாமல் ஒரகடத்தில் உள்ள எனது தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சுமார் 40,000 லிட்டர் மூலிகை பெட்ரோலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மூலப் பொருளையும் அவரிடம் ஒப்படைக்க உள்ளேன். இது பயன்பாட்டிற்கு வந்தால் டீசல் 18 பெட்ரோல் 14 ரூபாய் மக்களுக்கு சென்றடையும்.

    லாபத்தில் 50: 50

    லாபத்தில் 50: 50

    வரும் வருவாயில் எனக்கு 50% அவருக்கு 50% சதவீதம் என அனைத்தும் கையெழுத்திட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் மூலிகை பெட்ரோல் தயாரித்த பிறகு வெளியேறும் எரிவாயுவை 200 ரூபாய் செலவு செய்தால் சமைக்கும் எரிவாயுவாக மாற்றலாம். ஆக இந்த மூலிகை பெட்ரோல் மற்றும் டீசலை வைத்து பல்வேறு வாகனங்களை சோதனை நடத்தியுள்ளோம் அனைத்தும் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்தார்.

    English summary
    Ramar Pillai says that he has threat from CBI officers and he is going to handover Herbal petrol formula.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X