Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா?.. உடனே "இதை" செய்ங்க.. இல்லாட்டி உங்க கார்டு செல்லாது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கார்டு வச்சிருக்கீங்கல்ல, இதை மட்டும் செய்யாவிட்டால் உங்கள் கார்டு இந்த ஜூலை மாதத்திலிருந்து செல்லா கார்டாகிவிடும்.

ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரேஷன் கார்டு மூலம் அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் மக்களை போய் சேர வேண்டும் என்பதில் மத்திய மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

இந்த நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் பெற

ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் பெற

இதன் மூலம் நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடைகளிலும் ரேஷன் பெற முடியும். ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது. தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளம்

அதிகாரப்பூர்வ இணையதளம்

எப்படி இணைக்க வேண்டும் என்றால் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் start now என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதில் முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும்.

 ஜூன் 30 இல் இணைக்கலாம்

ஜூன் 30 இல் இணைக்கலாம்

ஆதாரை இணைக்காமல் இருந்தால் உடனடியாக இணைத்துவிடுவது நல்லது. ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் ரேஷன் கார்டின் பலன்கள் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே உடனடியாக இணைக்கும்படி அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் இணைக்கலாம்

ஆன்லைன் மூலம் இணைக்கலாம்

ரேஷன் கடைகளுக்கு செல்ல தேவையில்லை. வீட்டில் உட்கார்ந்த படியே ஆன்லைன் மூலம் இணைத்துவிடலாம். இதற்கு அசல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றை கொண்டு ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+