இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 அறிவிப்பு எப்போது... மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் , குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்து விட்டது. திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்று கவுன்சிலர்கள் பதவியேற்றுள்ளனர். மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களிலும் பெரும்பாலான பதவிகளில் திமுகவினரே வெற்றி பெற்றுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பதவியில் அமர்ந்த அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அமைச்சரவைக்கூட்டம்
இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், வரும் நிதியாண்டிற்கான நிதி நிலை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழக மின்சார வாரியத்திற்கு 13, 200 கோடி ரூபாய் நிதி பெறுவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

தமிழக பட்ஜெட்
மார்ச் மூன்றாவது வாரத்தில் தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் 18ஆம் தேதியும், வேளாண்மை பட்ஜெட் 19ஆம் தேதியும் தாக்கல் ஆக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

ரூ. 1000 உரிமைத் தொகை
உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களை மகிழ்விக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதில் முக்கியமானது இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகையாகும்.

பெண்களைக் கவரும் பட்ஜெட்
அதே போல கேஸ் மானியம் குறித்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் கூட்டத் தொடரில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது குறித்த ஆலோசனையும் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் பெண்களை மகிழ்விக்கும் பட்ஜெட் ஆக இருக்கும் என்று தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications