"குப்பை தொட்டியில் மின்னிய வைர நெக்லஸ்".. பார்த்ததும் தூய்மை பணியாளர் செய்த செயல்! நெகிழ்ந்த சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வீட்டில் இருந்து மிஸ்ஸாகி குப்பை தொட்டியில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸை தூய்மை பணியாளர் எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வரும் நிலையில் தூய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னை விருகம்பாக்கம் பிவி ராஜமண்ணார் சாலையில் உள்ள விண்சர் பார்க் அபார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் தேவராஜ். இவர் வசித்து வரும் பகுதி என்பது சென்னையின் 10வது மண்டலத்தில் 137 வது வார்டாகும். இந்நிலையில் தான் தேவராஜ் வீட்டில் இருந்த வைர நெக்லஸ் திடீரென்று மாயமானது.

diamond necklace chennai corporation

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீடு முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் வைர நெக்லஸ் கிடைக்கவில்லை. மாயமான வைர நெக்லஸின் மதிப்பு ரூ.5 லட்சமாகும். இதனால் அவர் தொடர்ந்து தேடிவந்தார். ஆனாலும் வைர நெக்லஸை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த வேளையில் தான் அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது வைர நெக்லஸ் என்பது அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் ஒருவேளை கீழே விழுந்து இருக்கலாம். அதனை கவனிக்காமல் குப்பையோடு குப்பையாக கூட்டி வெளியே குப்பை தொட்டியில் போட்டு இருக்கலாம் என்று அவர் நினைத்தார். இதனால் வீட்டருகே அவர் குப்பை போடும் தொட்டியில் தேட முடிவு செய்தார்.

இதுதொடர்பாக அவர் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் உர்பசேர் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். இதையடுத்து உர்பசேர் நிறுவனத்தின் தூய்மை பணியாளரும், குப்பை வாகன டிரைவருமான அந்தோணி சாமி அங்கு வந்து குப்பை தொட்டியில் வைர நெக்லஸை தேடினார்.

அப்போது குப்பை தொட்டியில் வாடிய மாலைகளுக்கு இடையே மாட்டியபடி வைர நெக்லஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வைர நெக்லஸை அவர் தேவராஜிடம் ஒப்படைத்தார். வைர நெக்லஸை வாங்கி கொண்ட தேவராஜ் தூய்மை பணியாளர் மற்றும் அங்கு வந்திருந்த வார்டு சூப்பர்வைசர் அஜய் மற்றும் யூனிட் அதிகாரி ஜோசப் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் மிஸ்ஸான ரூ.5 லட்சம் வைர நெக்லஸை குப்பை தொட்டியில் தூய்மை பணியாளர் தேடி உரிமையாளரிடம் ஒப்படைத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+