சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேட்பு மனு தாக்கல்.. வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி.. தலைமை தேர்தல் அதிகாரி கண்டிப்பு

வேட்பு மனு தாக்கல் குறித்து சத்யபிரதா சாகு புதிய விதிமுறைகள் பிறப்பித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை : மக்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் சேர்ந்து 5பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல், மற்றும் காலியாக உள்ள 18 சட்ட பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-முதல் தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய நாள் தவிர்த்து மற்ற நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. போராடிய மாணவர்களை இழுத்து வேனில் ஏற்றிய புதுக்கோட்டை போலீஸ்பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. போராடிய மாணவர்களை இழுத்து வேனில் ஏற்றிய புதுக்கோட்டை போலீஸ்

சத்யபிரதா சாகு

சத்யபிரதா சாகு

தற்போது வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான சில விதிமுறைகளையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

5 பேர் அனுமதி

5 பேர் அனுமதி

அதன்படி, "ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்யக்கூடாது. மனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளருடன் 5 பேருக்கு மேல் இருந்தால் அனுமதிக்க கூடாது.

வாகனங்கள்

வாகனங்கள்

வேட்பாளர் வேட்புமனு தாக்கலின் போது பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கலாம். ஆனால் எத்தனை பத்திரிகையாளர்களை அனுமதிப்பது என தேர்தல் அதிகாரி முடிவெடுக்கலாம். அலுவலக வாயிலில் இருந்து 100 அடி தொலைவுக்குதான் வாகனங்கள் எல்லாம் நிறுத்தப்பட வேண்டும்.

நோட்டீஸ் போர்டு

நோட்டீஸ் போர்டு

வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் யார், அவர்களின் விவரம் எல்லாம் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலக நோட்டீஸ் போர்டில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்படும். இதை தவிர அந்த விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்" என்றார்.

English summary
Chief Electoral Officer Sathyaparatha Sahoo Announces about the nomination Rules
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X