சங்கிகளுக்கு எல்லா அறிவும் கம்மி.. பாஜகவினர் எனக்கு பயந்து போட்டிபோடல - திமுக எம்பி அப்துல்லா சுளீர்
சென்னை: பாஜகவினர் தன்னை எதிர்த்து போட்டியிட பயந்ததால் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியின்றி வெற்றிபெற்றதாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது தேர்தல் இல்லாத ஆளுநர் போன்ற நியமன பதவி இல்லை என்று திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா விமர்சித்து இருக்கிறார்.
புதுக்கோட்டையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவின் பெயரை சுட்டிக்காட்டி பேனர் ஒன்றை வைத்து இருக்கிறார். அந்த பேனரில், "ஆளுநர் அவர்கள் புதுக்கோட்டை வருவதாக எனக்கு தெரியவில்லை.
இந்த டிஜிட்டல் பேனரை சென்னையில் வைத்தால் மிக்க நன்றி. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா எம்பி அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!" என்று குறிப்பிட்டப்பட்டு அவரது புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

எம்.எம்.அப்துல்லா பதிவு
இந்த பேனரின் புகைப்படத்தை திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா பேஸ்புக்கில் பகிர்ந்து அதற்கு பதிலளித்து இருக்கிறார். அதில், "புதுக்கோட்டையை சேர்ந்த இனிய நண்பர் சீனிவாசன் அவர்கள் நான் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் என்பதை நக்கல் செய்வதாக நினைத்துக் கொண்டு அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற எம்பி என்று கூறியுள்ளார்.

பாஜகவினர் பயந்தனர்
நாடாளுமன்ற மேலவைக்கும் தேர்தல் உண்டு. அத்தனை எம்எல்ஏக்களும் அதற்கு வாக்களிப்பார்கள்! திமுக வேட்பாளரான என்னை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தினால் தோற்று விடுவோம் என்ற பயத்தில் பிஜேபி உள்ளிட்ட யாரும் வேட்பாளரை நிறுத்த வில்லை!! அதே நேரத்தில் தேர்தல் மன்னனான அண்ணன் பத்மராஜன் அவர்கள் தைரியமாக சுயேட்சையாக என்னை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார்!

ஆளுநர் போன்ற பதவியில்லை
அவர் தனது விண்ணப்பத்தில் ஒரு சில விவரங்களை இணைக்கத் தவறியதால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது! எனவே நண்பர் சீனிவாசன் சொன்னது போல அதிக வாக்குகள் என்பதையும் தாண்டி "அன் அப்போஸ்ட்டாக" வெற்றி பெற்றேன்!! மேலவை எம்பி என்றால் ஏதோ தேர்தல் இல்லாத "கவர்னர்" போன்ற நியமன பதவி என்று நண்பர் சீனிவாசன் நினைத்து விட்டார் போலும்!!

சங்கிகள் அறிவு
அது குறித்து எனக்கு ஆச்சர்யம் இல்லை... காரணம் சங்கிகளுக்கு பொது அறிவு மட்டுமல்ல.. எல்லா அறிவும் கம்மி என்பதை அறிவோம்." என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவிற்கு செல்வ பூபதி என்ற நபர் நிதியமைச்சர் எவ்வளவு வாக்கில் வெற்றிபெற்றார்களாம்?" என்று கருத்திடம், "ஒன்றிய அரசில் முக்கால்வாசி அமைச்சர்கள் மேல் சபை உறுப்பினர்களே!!" என்று எம்.எம். அப்துல்லா பதிலளித்து இருக்கிறார்.

போட்டியின்றி தேர்வான அப்துல்லா
2019 ஆம் ஆண்டு அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதால் அவரது பதவி காலியானது. இதற்கான தேர்தல் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திமுக பெரும்பான்மை பலத்தோடு இருந்ததால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனை அடுத்து எம்.எம்.அப்துல்லா கடந்த ஆண்டு செப்டம்பர் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக்












Click it and Unblock the Notifications