45 சவரன் நகையை ஒப்படைத்த 'சொக்கத்தங்கம்'! தூய்மை பணியாளருக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவம்
சென்னை: சாலையில் கிடந்த 45 சவரன் நகைகளை, காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டி, அஞ்சல் துறை அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்திருக்கிறது.
சென்னை மாநகராட்சியில், தனியார் ஒப்பந்தம் மூலம் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வரும் பத்மா (50). இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி தனது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தி.நகர் வண்டிக்காரன் சாலையில். கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் ஐஸ்கிரீம் டப்பாவிற்குள் ரூ.45 லட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் இருந்தன.

எவ்வித சலனமும் இன்றி, அந்த நகைகளை உடனடியாகத் தனது மேற்பார்வையாளர் மூலம் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் பத்மா. இந்தச் செய்தி அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பத்மா அவர்களை நேரில் அழைத்துச் சால்வை அணிவித்துப் பாராட்டினார். மட்டுமல்லாது அவரது நேர்மைக்கு ஊக்கமாக அரசு சார்பில் ₹1 லட்சத்திற்கான காசோலை பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், பத்மா அவர்களின் இந்த உயரிய நேர்மையைப் போற்றும் வகையில், தமிழக அஞ்சல் துறையின் மத்திய கோட்டம், அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டு கௌரவித்துள்ளது. சாமானியத் தூய்மைப் பணியாளரின் நேர்மையை அங்கீகரிக்கும் வகையில் அஞ்சல் துறை எடுத்த இந்த நடவடிக்கை சோஷியல் மீடியாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொதுவாக நினைவு அஞ்சல் தலைகள் வெளியிடப்படுவதுண்டு. நாட்டின் மிக முக்கியமான ஆளுமைகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுக்காக இவை வெளியிடப்படும். உயிருடன் இருப்பவர்களுக்குப் பொதுவாக இந்த வகை அஞ்சல் தலைகள் வெளியிடப்படாது. ஒரு நபர் மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த அஞ்சல் தலை வெளியிடப்படும்.
இப்படி இருக்கையில், உயிருடன் இருக்கும் பத்மாவுக்கு, அஞ்சல் துறை முன்வந்து அஞ்சல் தலைகளை வெளியிட்டிருப்பது, பத்மாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை!











Click it and Unblock the Notifications