சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறுபடியும் அதே பிளானா.. அடுத்த ரவுண்டுக்கு ரெடியான சசிகலா 2.0.. ஆடிப்போன அமமுக.. என்ன நடக்குது?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த அதிமுக ஆட்சியை இழந்துள்ளது.. இன்னொரு பக்கம் அமமுகவும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாமல் மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் சசிகலாவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை சசிகலா பெரிய ஸ்பாய்லராக இருப்பார் என்றுதான் தேர்தலுக்கு முன் கணிக்கப்பட்டது. ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா சில நாட்களில் மொத்தமாக அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக அறிவித்தார்.

அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும், நான் அரசியலில் ஈடுபட போவதில்லை என்று கூறி மொத்தமாக சசிகலா ஆக்டிவ் பாலிடிக்சில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.

1957ம் ஆண்டு முதல் தொடரும் 'வேடசந்தூர் சென்டிமெண்ட்'.. ஆட்சியை பிடித்த திமுக1957ம் ஆண்டு முதல் தொடரும் 'வேடசந்தூர் சென்டிமெண்ட்'.. ஆட்சியை பிடித்த திமுக

 பயணம்

பயணம்

அதோடு அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலா, மொத்தமாக ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கி. சென்னை, தஞ்சை, திருச்சி என்று ஊர் ஊராக கோவில்களுக்கு சென்றார். அரசியல் ரீதியாக அதிமுகவிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்காமல், முழுக்க முழுக்க ஆன்மீகம் மீது மட்டுமே கவனம் செலுத்தி, பயணங்களை மேற்கொண்டு வந்தார்.

தினகரன்

தினகரன்

தற்போது சட்டசபை தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்துள்ளது. அதிமுகவும் ஆட்சியை இழந்துள்ளது. அமமுகவில் இனியும் எதிர்க்காலம் இல்லை என்று கருதும் பல அமமுக நிர்வாகிகள் கட்சி தாவ ரெடியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இன்னொரு பக்கம், அமமுகவின் சரிவை பயன்படுத்தி, அங்கு இருப்பவர்களை மீண்டும் அதிமுக பக்கம் இழுக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

தினகரன்

தினகரன்

தினகரனும் கட்சி நிர்வாகிகளுக்கு இனி என்ன சொன்னாலும் நம்பிக்கை வர போவதில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் சசிகலா மீண்டும் இன்னொரு ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள போவதாக தகவல்கள் வருகின்றன. அதாவது அதிமுகவை கட்டுப்படுத்தாமல், அமமுகவையும் கட்டுப்படுத்தாமல் மீண்டும் ஆன்மீக 2.0 பயணத்தை சசிகலா மேற்கொள்ள போகிறாராம்.

கொரோனா

கொரோனா

கொரோனா கட்டுப்பாடுகளால் கொஞ்சம் இந்த பயணம் தள்ளிப்போனாலும், விரைவில் பயணத்தை தொடங்கும் திட்டத்தில் அவர் இருக்கிறாராம். சசிகலா எதை மனதில் வைத்து இந்த திட்டத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்த ஆன்மீக பயணம் தன் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சசிகலா நம்புவதாக கூறப்படுகிறது.

தினகரன் பேசவில்லை

தினகரன் பேசவில்லை

தேர்தல் முடிவிற்கு பின் தினகரனிடம் சசிகலா பேசி இருக்கிறாராம். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், போட்டியிட்டதற்காக தினகரனுக்கு சசிகலா பாராட்டுகளை தெரிவித்ததாகவும் மன்னார்குடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மீண்டும் ஆக்டிவ் பாலிடிக்சில் இணைவது பற்றி அவர் பேச வில்லையாம். நிலைமை இப்படி இருக்க சசிகலா மீண்டும் இப்படி ஆன்மீக பயணம் மேற்கொள்வதை பார்த்து.. அவரின் வருகைக்காக காத்திருந்த பல அமமுக தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Sasikala may start her another round of Spiritual Trip soon in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X