சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலாவின் முதல் குறி "இவர்"தான்.. கச்சிதமாக ஸ்கெட்ச் போடும் சின்னம்மா.. வெலவெலக்கும் கட்சிகள்!

பூங்குன்றனை வைத்து தன் அரசியலை மீண்டும் ஆரம்பிக்க உள்ளார் சசிகலா

Google Oneindia Tamil News

சென்னை: கன கச்சிதமாக வேலையை ஆரம்பித்துள்ளார் சசிகலா.. எத்தனையோ அதிகாரிகள், அமைச்சர்கள், ஆதரவாளர்கள், விசுவாசிகள், என பலர் இருக்க, இந்த ஒருவர் மீது சசிகலாவின் பார்வை விழுந்துள்ளது.. அவர்தான் பூங்குன்றன்.

மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்.. இவர் ஜெ.வின் அதீத நம்பிக்கைக்குரியவர்.. சசிகலா குடும்பத்துக்கும் நெருக்கமானவர்.

ஆனால், சசிகலா ஜெயிலுக்கு சென்றபிறகு, இவரை எடப்பாடியார் தரப்பு அவ்வளவாக கண்டு கொள்ளாமலேயே இருந்தது.. அதிமுக விழாக்கள், கூட்டங்களிலும்கூட பூங்குன்றன் தென்படவே இல்லை.. அதற்கேற்றபடி, பூங்குன்றனும் முன்புபோல அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்..

 சின்னம்மா

சின்னம்மா

கோயில்குளம் என சுற்ற ஆரம்பித்துவிட்டார்.. எங்காவது ஒரு கோயிலில் தினமும் திருப்பணிகளை செய்து கொண்டிருப்பார்.. அடிக்கடி ஜெ.வின் நினைவுகளை மட்டும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொள்வார்.. "ஜெ.இல்லாத அதிமுக, சிங்கம் இல்லாத காடு போல என்று சொல்லி கொண்டே இருப்பார்.

 அம்மா

அம்மா

கடந்த ஜனவரி 14-ம் தேதி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் விசுவாசம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. அம்மா எனக்கு ஆசையாக வாங்கித் தந்த காரை நிறுத்திவிட்டார்கள். இதுவரை அதை ஏன் என்று கேட்டிருப்பேனா? கட்சியின் சொத்துகளான அறக்கட்டளைகள் மூன்றிலும் அம்மாவின் மறைவுக்குப் பிறகு நான் மட்டுமே நிர்வாகி. இதை மாற்றிக் கொடுத்தால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்னார்கள். இதை எங்காவது வெளியில் சொல்லியிருப்பேனா...

விண்ணப்பம்

விண்ணப்பம்

அறக்கட்டளைகளுக்குச் சொந்தம் கொண்டாடினேனா... மூன்று முறை கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுக்கு விண்ணப்பித்தபோது, என்னுடைய விண்ணப்பத்தை மட்டும் நிராகரித்தீர்களே, அதை எங்காவது வெளியில் சொல்லியதுண்டா? எனக்குவ் சொத்திலும் ஆசை இல்லை, கட்சியிலும் ஆசை இல்லை. இதற்கு மேல் கழகத்துக்கு எப்படி விசுவாசமாகச் செயல்படுவது என்று எனக்கும் தெரியவில்லை என்று ஓபிஎஸ்-இபிஎஸ் மீதான தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.

தேன்கூடு

தேன்கூடு

அதேபோல, சசிகலாவின் ரிலீஸ் ஆன அன்றுகூட ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், ஒரு கல்லை எடுத்து நாயைபார்த்து வீசினால் அது பயந்து ஓடி விடும். அதே கல்லால் ஒரு தேன் கூட்டை நோக்கி வீசினால் தேனீக்களுக்கு பயந்து நாம் ஓட வேண்டும். பலம் வாய்ந்த நாயைவிட தேனீக்களை பார்த்து பயப்படுவதற்கு காரணம் தேனீக்கள் ஒற்றுமையாக நம்மை துரத்துவதால்தான். எந்த இனமாக இருந்தாலும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்..! என்று பதிவிட்டார்.

 நாய்

நாய்

அதாவது, சசிகலாவை நாயைப்போலவும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் போன்ற நிர்வாகிகள் தேனிக்களை போலவும் இருந்து இந்த கழகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையே சூசகமாக பூங்குன்றன் கூறியது போல பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், மீண்டும் ஒரு தகவல் பூங்குன்றன் குறித்து கசிந்து வருகிறது. சசிகலாவின் பார்வை இவர்மீதுதான் தற்போது விழுந்து வருகிறதாம்.

 பேச்சு

பேச்சு

இப்போதுதான் சசிகலா ரிலீஸ் ஆகி வந்திருப்பதால், இன்னும் யாருடனும் பேசவில்லை.. அரசியல் ரீதியான எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.. யாரையும் சந்திக்கவும் இல்லை.. அதனால் அவர் எந்த நிலைப்பாட்டில் உள்ளார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.. இப்படிப்பட்ட சூழலில் பூங்குன்றனை தன் கட்டுப்பாட்டில் எடுத்து, அவரை வைத்து அதிமுகவுக்கு செக் வைக்க சசிகலா பிளான் செய்து வருகிறாராம்.

 ஜெயலலிதா

ஜெயலலிதா

ஏனென்றல், இவர்தான் 20 வருஷங்களாக கூடவே இருந்தவர்.. அதுபோக அதிமுகவின் சொத்துக்களை பராமரிக்க வேண்டி உள்ளது.. அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற 2 அறக்கட்டளைகள் இருக்கின்றன... இதற்கு ஜெயலலிதாவும் பூங்குன்றனும்தான் நிர்வாகிகளாக இருந்தனர்... இப்போதும் அநத் பொறுப்பில் பூங்குன்றன் இருந்து வருகிறார். அதுமட்டுமல்ல, அதிமுக சார்பாக வாங்கப்பட்ட நிலங்கள், கட்டப்பட்ட கட்சி ஆபீஸ்கள் எல்லாமே பூங்குன்றன் பெயரில்தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கிறதாம்.

 ஹைகோர்ட்

ஹைகோர்ட்

எனவே, பூங்குன்றனை மீண்டும் உள்ளே இழுத்துபோடவும் முயற்சி நடப்பதாக சொல்லப்படுகிறது.. அதுமட்டுமல்ல, தன்னை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என்று உத்தரவிடக் கோரி, சென்னை ஹைகோர்ட்டில் சசிகலா கேஸ் போட்டுள்ளதால், அதற்கும் பூங்குன்றன் பக்கபலமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. சிறை சென்றுவிட்டு திரும்பி உள்ள சசிகலா மீது ஒரு அனுதாப அலையையும் பூங்குன்றன் ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

 தலைமை?

தலைமை?

ஒருவேளை சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிட்டால், அடுத்த செகண்டே காட்சிகள், கோலங்கள் டக்டக்கென மாறக்கூடுமாம்... அதிமுகவின் அதிகாரத்தை மொத்தமாகவே சசிகலா கையில் எடுக்க கூடும் என்கிறார்கள்.. இப்படி எல்லாவகையிலும் சசிகலாவுக்கு பூங்குன்றன் உதவியாக இருக்க போகும் பட்சத்தில் அதிமுக தலைமை என்ன செய்யும்? நினைவு மண்டபத்தை இழுத்து மூடிவிடலாம்.. ஆனால் நடக்க போகும் அரசியல் ஆட்டத்தை...?

English summary
Sasikala's new strategy and planning to take Poonkundram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X