கார்டு மேலே 16 நம்பர் - போன் எடுக்காதீங்க! வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் வங்கியின் அவசர எச்சரிக்கை
சென்னை: 2 செல்போன் எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எடுக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் வங்கி கணக்குதாரர்களை மையப்படுத்தி நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அனைவரும் கட்டாயம் வங்கிக்கணக்கு வைத்திருக்க வேண்டும் என நிர்பந்தம் ஏற்பட்டதால் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளன.

அறியாதவர்களிடம் அபேஸ்
படிக்காத ஏழை பாமர மக்கள் கூட வங்கிக் கணக்குகளையும், ஏடிஎம் இயந்திரங்களையும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இத்தகையவர்களை குறிவைத்து மோசடி செய்ய இந்தியாவில் ஒரு பெரிய நெட்வொர்க்கே செயல்பட்டு கொண்டிருக்கிறது. வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி அவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் ஏடிஎம் ரகசிய எண் போன்றவற்றை கேட்டுபெற்று மோசடி செய்து வருகின்றனர்.

தமிழர்களை குறிவைக்கும் வட இந்திய கும்பல்
குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த வாடிக்கையாளர்களை வட இந்தியாவை சேர்ந்த மோசடி கும்பல் குறிவைத்து பணம் பறிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. போனை எடுத்தவுடன் அரைகுறை தமிழில் கார்டு மேலே இருக்கும் 16 நம்பர சொல்லுங்க என்று கேட்டு, வங்கி மேனேஜர் பேசுகிறேன் என்று பொய் சொல்லி ஏடிஎம் கார்ட் காலாவதியாக போகிறது என்று பயம் காட்டி விபரங்களை பெற்று பணம் பறித்து வருகிறது.

கண்டுபிடித்தால் கெட்ட வார்த்தை மழை
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்ததை விசாரித்தால் அனைவர் சொல்வது ஒரே மாதிரியாக இருக்கும். அதைவைத்தே இது மிகப்பெரிய மோசடி நெட்வொர்க் என்பதை அறிய முடியும். வாடிக்கையாளர்கள் சிலர் தங்களுக்கு வரும் இதுபோன்ற அழைப்புகள் மோசடி கும்பலிடம் இருந்து வருகிறது என்பதை அறிந்து விபரங்களை தெரிவிக்க மறுத்துவிடுகின்றனர். அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடுகின்றனர் இந்த வட இந்திய மோசடி கும்பலை சேர்ந்தவர்கள்.

புகாரளித்தும் பயனில்லை
இதுகுறித்து காவல்நிலையத்திலும் சைபர் கிரைமிலும் புகாரளித்தும் பயனில்லை என்பதே பாதிக்கப்பட்ட பலரது கருத்தாக உள்ளது. செல்போன் எண்கள் முடக்கப்பட்டாலும், பறிபோன பணம் கிடைக்கவில்லை என்றும் வெவ்வேறு செல்போன் எண்களில் அந்த கும்பல் மோசடியை தொடர்வதாக கூறப்படுகிறது. இந்த மோசடிக்கு ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி என எந்த வங்கி வாடிக்கையாளர்களும் விதிவிலக்கு அல்ல.

ஸ்டேட் வங்கி எச்சரிக்கை
இந்த நிலையில்தான், பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், வங்கி மோசடிகளை தவிர்க்க விரும்புபவர்கள் +91-8294710946, +91-7362951973 ஆகிய எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்து இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த 2 எண்களையும் தங்கள் மொபைலில் பதிவு செய்து பிளாக் செய்து கொள்வதன் மூலம் அழைப்புகளை தவிர்க்கலாம்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications