சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லஞ்ச ஒழிப்பு ஐஜி மீதான பாலியல் புகார்.. செப். 23ம் தேதி விசாரணையை கையில் எடுக்கும் உச்ச நீதிமன்றம்

Google Oneindia Tamil News

சென்னை: பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.முருகன் மீதான வழக்கை தெலங்கானா மாநிலத்துக்கு மாற்றியதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த முடிவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை ஐஜி-யாக இருந்தவர் முருகன். இவர் மீது பெண் காவல் கண்காணிப்பாளராக இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கடந்த 2018ம் ஆண்டில் ஒரு பாலியல் புகார் அளித்தார். தனக்கு முருகன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார்.

பொதுவாக இதில் காவல்துறை சார்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு விசாகா கமிட்டி போன்ற கமிட்டியை அமைக்க வேண்டும். அதன்படி காவல்துறை டிஜிபி உத்தரவின் பேரில் ஐஜி-யாக இருந்த முருகன் குறித்து விசாரிக்க விசாகா குழு டிஜிபி சீமா தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த விசாகா குழு, வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு பரிந்துரை செய்தது.

ஜெ. மரணம்: ஒன்லி 4 சாட்சியங்களை தான் விசாரிக்கனும்..சுப்ரீம்கோர்ட்டில் ஆறுமுகசாமி ஆணையம் பரபர தகவல்ஜெ. மரணம்: ஒன்லி 4 சாட்சியங்களை தான் விசாரிக்கனும்..சுப்ரீம்கோர்ட்டில் ஆறுமுகசாமி ஆணையம் பரபர தகவல்

விசாகா பரிந்துரை

விசாகா பரிந்துரை

ஆனால் இந்த புகாரில் அதன்பின் விசாரணை எதுவும் நடக்காமல் காலம் தாழ்த்தப்ட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பெண் எஸ்பி தனியாக வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லஞ்ச ஒழிப்புதுறை ஐ.ஜி.க்கு எதிராக விசாகா குழுவின் பரிந்துரையை ஏற்று சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன்பின் சி.பி.சி.ஐ.டி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஐ.ஜி முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

முறையீடு

முறையீடு

இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பாலியல் புகார் மற்றும் அது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை தெலுங்கானா மாநில காவல்துறையை விசாரிக்க உத்தரவிட்டனர். சிபிசிஐடி விசாரிப்பது சரியாக இருக்காது. முக்கியமாக தெலுங்கானாவில் மேலும் இந்த வழக்குகளை விசாரிக்க, பெண் காவல் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

தெலுங்கானா

தெலுங்கானா

தெலுங்கான டி.ஜி.பி இதை மேற்பார்வையிட வேண்டும்.,இந்த புகார் மீதான விசாரணையை 6 மாத காலத்திற்குள் விசாரித்து முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டனர். தமிழ்நாடு போலீஸ் குறித்த வழக்கை தமிழ்நாடு போலீஸ் விசாரிப்பது சரியாக இருக்காது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் தமிழக தலைமை செயலாளர் இந்த வழக்கின் ஆவணங்களை உடனடியாக தெலுங்கானா காவல்துறைக்கு வழங்கவும் உத்தரவிட்டபபட்டது.

மீண்டும் முறையீடு

மீண்டும் முறையீடு

இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்பி வழக்கு தொடுத்த முருகன் தெலுங்கானா போலீஸ் வசம் வழக்கு சென்றதால் மீண்டும் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐ.ஜி முருகன் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சுபாஷ் ரெட்டி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜிக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

பதில்

பதில்

மேலும் இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அதேபோல் புகார்தாரரான பெண் காவல் துறைக் கண்காணிப்பாளருக்கும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்ச்சியாக நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த சில மாதமாக இந்த வழக்கு விசாரிக்கப்படாமல் அப்படியே உள்ளது.

English summary
Supreme Court to hear Anti-Corruption IG Murugan case against Telangana police investigation on September 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X