தமிழகத்தில் முடிவுக்கு வந்த அரையாண்டு விடுமுறை .. 6 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. டிச.24ம் தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது.

6 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 9 நாட்களும், 1 முதல் 5 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 12 நாட்களும் விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
1 முதல் 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 5ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 1 முதல் 3 வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம் நடைபெறவுள்ளதால் விடுமுறை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதர வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளிகள் மீது முதன்மை கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து வந்தனர். தொடர்ந்து, விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்புகள் பள்ளிக்கல்வி ஆணையரிடம் வலியுறுத்தின.
இந்த நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவ - மாணவியர் உற்சாகமாக பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஜனவரி 5ம் தேதி முதல் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்க உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications