சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாட்டுகறி, பன்றிகறி, பாம்புகறி தின்பேன்.. அது என்இஷ்டம்.. பஞ்சம் வந்தப்போ எங்க போனீங்க? சீமான் நறுக்

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை விமான நிலையத்தில் சீமான் பேட்டி-வீடியோ

    மதுரை: "மாட்டுக் கறி, பன்றிக்கறி, பாம்புக்கறி, எலிக்கறி தின்பேன்.. அது என் இஷ்டம்.. தஞ்சையில் தண்ணீர் வராமல் இருக்கும் போது பல்லி, பூரான், எலிகளை சாப்பிடும்போது நீங்கள் எங்க போனீங்க?" என்று சீமான் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

    மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடந்து முடிந்த தேர்தல் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் சீமான் சொன்னதாவது:

    "வளர்ச்சி, வளர்ச்சின்னு ஐயா மோடி பேசி வருகிறார். 3 ஆயிரம் கோடியில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை இருக்கிறது. அதே குஜராத்தில் மாடியில் தீப்பிடித்து எரியுது.. அதில் 28 பேர்களுக்கு மேல் இறந்து போய்ட்டாங்க. அந்த தீயை அணைக்க ஏணியை வெச்சு தண்ணியை பீச்சி அடிக்க முடியவில்லை இவங்களால. இதுவா வளர்ச்சி? ஒரு பேரிடர் காலங்களில் மக்களை எப்படி காப்பாற்றுவது என்ற அடிப்படை கட்டமைப்பு இல்லாத நாடு. 3000 ஆயிரம் கோடி செலவு செய்து சிலை அமைக்குது, மூன்று ஆயிரம் ரூபாய்க்கு ஏணி வாங்க முடியவில்லையா?

    ராஜ்யசபா: அங்கிட்டு வேல்முருகன், சுபவீ... இங்கிட்டு காங்.? என்ன செய்யும் திமுக? ராஜ்யசபா: அங்கிட்டு வேல்முருகன், சுபவீ... இங்கிட்டு காங்.? என்ன செய்யும் திமுக?

    கட்டமைப்பு இல்லை

    கட்டமைப்பு இல்லை

    தமிழ்நாடு ஆன்மிக பூமியாக இருந்து வந்துள்ளது. மதத்திற்கு ஜாதிக்கு என்று பெரிய அளவில் சண்டை கலவரங்கள் தமிழ்நாட்டில் வந்ததில்லை. தமிழர்கள் இதற்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுத்துள்ளார்கள். மிகவும் மேம்பட்ட பண்பட்ட சமூகம் மக்கள் தமிழ் மக்கள் ஏனென்றால் 50,000 மூத்த குடி அதிக நாகரீக பண்பட்ட சமூகம் வந்து போர்க் குணத்தை இழந்து விடும் என்று கூறுகிறார்கள். தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம் உடையவர்கள்.

    ஆந்திரா

    ஆந்திரா

    மோடி அவர்கள், ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்கும்போது ஆந்திராவின் வளர்ச்சிக்கு உதவுகிறேன் என்று சொன்னார். எப்படி? தனது சொந்த பணத்தையும் சொத்தையும் விட்டு ஆந்திராவுக்கு தர போறாரா? ஆந்திர மக்கள் வரி பணத்தை நீங்கள் எத்தனை விழுக்காடு வாங்குகிறார்கள்? எத்தனை விழுக்காடு திரும்ப செலுத்துகிறீர்கள்? நான் ஒரு ரூபாய் கொடுத்தால் 40 பைசா மட்டுமே திரும்ப வருகிறது.

    வருமானம்

    வருமானம்

    உத்திரபிரதேசம் ஒரு ரூபாய் கொடுத்தால் 3 ரூபாய் 50 பைசா குடிக்கிறார்கள். எவ்வளவு பெரிய பாரபட்சம்? இந்தியாவிலேயே அதிக வருமானம் தரக்கூடிய மாநிலத்தில் நான் இரண்டாவது மாநிலத்தில் இருக்கிறேன். ஆனால் எனக்கு எவ்வளவு திருப்பிக் கொடுக்கிறீர்கள்?

    அச்சுறுத்தல்

    அச்சுறுத்தல்

    ஒரு பேரிடர் காலத்தில், போகி புயல், குரங்கணி தீவிபத்து ஒரு நிவாரணம் கொடுத்தது கிடையாது. பீகாரில் ஒரிசாவில் வெள்ளம் வந்தால் பறந்து சென்று பார்ப்பவர் எங்களை ஏன் பார்க்கவில்லை? இது மக்களை அச்சுறுத்துவது... மத்தியில் இருக்கும் அரசை நயந்து போங்கள் என்று கூறுவது. அதை ஏற்க முடியாது

    அந்நிய செலாவணி

    அந்நிய செலாவணி

    ஒரு ஆண்டிற்கு 24 லட்சம் டன் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறது இந்தியா. அந்நிய செலவாணி இதன்மூலம் ஈட்டுகிறது. மாட்டுக்கறியை வெட்டி ஊருக்கு ஊட்டி விடுகிறார்கள், ஆனால் இங்கு இருப்பவர்கள் சாப்பிட்டால் அடித்துக் கொல்கிறீர்களா? முதலில் நீங்கள் எங்கள் உணவை உறுதி செய்யுங்கள். மூன்று வேளை உணவை உறுதி செய்துவிட்டு, அதன்பிறகு எதை சாப்பிட வேண்டும் எனக் கூறுங்கள்.

    எங்க போனீங்க?

    எங்க போனீங்க?

    நான் எந்த கறியையும் சாப்பிடுவேன்? மாட்டுக் கறி, பன்றிக்கறி, பாம்புக்கறி, எலிக்கறி தின்பேன். அது என்னுடைய விருப்பம். மாட்டுக்கறியை திங்க கூடாது என அடிக்கிற நீங்கள், தஞ்சையில் தண்ணீர் வராமல் இருக்கும் போது பல்லி, பூரான், எலிகளை சாப்பிடும்போது எங்க போனீங்க? இது ஒரு கொடும் போக்கு. சிறுபான்மை என்பதை சொல்வதை கைவிட வேண்டும். அனைவரும் இந்திய நாட்டின் குடிமகன்கள்தான். சிறுபான்மை என்ற எண்ணமே ஆக ஆபத்தானது" என்றார்.

    English summary
    Naam Tamilar Party Seeman has blamed the lack of fundamental structure of how to save people during the disaster
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X