சூர்யாவுக்கு துணிச்சல் இருக்கு..! விஜய்யிடம் துணிச்சல் இல்லை..! சீமான் வாய்ஸ்
விஜய்யை தாக்கி சீமான் மறுபடியும் ஒரு பேட்டி தந்துள்ளார்
சென்னை: "நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் தைரியம், விஜய்க்கு இல்லை.. பயப்படறாரே.. ஏன் அவ்வளவு பயம்?" என்று சீமான் விமர்சித்துள்ளார்.
Recommended Video
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நாம் தமிழர் கட்சி சீமான் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகின்றன.. அதில் ஒரு கேள்விக்கான பதிலில், நடிகர் சூர்யாவை புகழ்ந்துள்ளார்.. அப்படியே வழக்கம்போல் விஜய்யையும் சீண்டி தாக்கி உள்ளார்.
"கலைத்துறையில் இருந்து வந்திருக்கீங்க, முல்லைப்பெரியாறு பற்றி பேச தமிழ் நடிகர்கள் இல்லை என்று நீங்க சொல்றீங்களே? நீங்களே அதற்கான முன்னெடுப்பை எடுக்கலாமே? என்ன தயக்கம்?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

கார்த்திக்
அதற்கு சீமான், "என்கூட நடிக்கவே எல்லாரும் பயப்படறாங்க.. திடீர்னு வருமானவரி சோதனை போடுவாங்க.. தியேட்டர் குடுக்க பயப்படுவாங்க.. படம் தயாரிக்க பயப்படறாங்க? எதுக்கு அவர் கூட நடிக்கிறேன்னு அவங்களை கேள்வி கேட்பாங்க.. ஏன்னா, நான் எல்லாரையும் எதிர்க்கிறேன்.. இதுதான் பிரச்சனை.. பணப்பாதுகாப்பு பற்றி தம்பி கார்த்திக் மட்டும்தான் குரல் கொடுத்தார்.. கல்வி கொள்கை பற்றி தம்பி சூர்யா மட்டும்தான் குரல் கொடுக்கிறார்.. அதுக்கு எவ்ளோ எதிர்ப்பு?ன்னு பார்த்தீங்க இல்லை..

துணிச்சல்
நாமதான் குறுக்கே வந்து மல்லுக்கட்ட வேண்டியிருக்கு.. அப்படின்னா நாம பேசவே கூடாதா? அந்த ஜெய்பீம் படம் பார்த்தேன்.. விடிகாலை 4 மணிக்குதான் வந்தேன்.. வந்ததுமே அந்த படம் பார்த்தேன்... இயக்குனர் தம்பி ரொம்ப கெட்டிக்காரத்தனமாக எடுத்திருக்கிறார்.. இந்த படத்தை தயாரிப்பதற்கு துணிவு வேண்டும்.. தமிழில் இப்படி ஒரு படம் வெளிவருவது பெருமையா இருக்க.. பிரம்மாதமா இருக்கு.. சூர்யா தவிர வேறு யாரு இப்படியெல்லாம் முயற்சி செய்வாங்க?" என்றார் சீமான்.

விஜய்
இதையடுத்து, "அப்படின்னா, சூர்யா தவிர மற்ற நடிகர்களுக்கு தைரியம் இல்லை என்கிறீர்களா?" என்று அடுத்த கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு சீமான் பதிலளிக்கும்போது, "துணிந்து பேசணும்.. என் தம்பி விஜய் பேசலாம்.. பேசணும்.. அவனுக்கு இருக்கிற உயரம் அவனுக்கே தெரியாது.. பயப்படுவான்.. ஏன் பயம்? இது உன் நாடு, உன் நிலம்.. உன் சொந்தம்.. உன் மக்கள்.. அவங்களுக்குதானே பேசப்போறே, உனக்கா பேச போறே? ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலேயே பேசப்போறே?

கொந்தளிப்பு
துணிந்து பேசு.. அவனுக்கு வந்த பிரச்சனைக்கும் நான்தான் போய் மல்லுக்கட்ட வேண்டியிருக்கு. அச்சத்தை கைவிடு அல்லது லட்சியத்தை கைவிடு.. ஏதாவது ஒன்னை கைவிடு.. இதுல ஒன்னை கைவிட்டால்தான் இன்னொன்னை அடைய முடியும்.. ஏன் எல்லாத்துக்கும் பயப்படறே?" என்று கேள்வி உள்ளார் சீமான்.. இந்த பேட்டி விஜய் ரசிகர்களை மறுபடியும் கொந்தளிக்க வைத்து வருகிறது.

சீண்டும் பேட்டிகள்
விஜய்யை சீமான் இப்படி விமர்சிப்பது இது முதல்முறை இல்லை.. ஆரம்ப காலத்தில் விஜய்யுடன் இணக்கமாக இருந்த சீமான், திடீரென அவரை எதிர்த்து பேட்டிகளை தர ஆரம்பித்தார்.. ஒருவேளை விஜய் அரசியலுக்கு வந்தால் அது நிச்சயமாக தன் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சீமான் கருதுவதாகவும், அதனாலேயே அவரை சீண்டுவதாகவும் ஏற்கனவே கருத்துக்கள் கூறப்பட்டன. அதுமட்டுமல்ல, அதிமுக, திமுகவுக்கு அடுத்து நாம் தமிழர் கட்சிதான் என்று நினைத்திருந்த நேரத்தில், வாக்குவங்கியை எளிதாக விஜய் பிரித்துவிடக்கூடுமோ என்ற கலக்கமும் சீமானுக்கு எழுந்ததால், கொந்தளித்து அப்படி பேட்டிகளை தந்ததாகவும் கூறப்பட்டது.

டெபாசிட்
அதுமட்டுமல்ல, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி, டெபாசிட்டை இழந்து வாஷ்-அவுட் ஆனதும் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.. விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கான வெள்ளோட்டமாக அது பார்க்கப்பட்டது.. இந்நிலையில்தான் மறுபடியும் விஜய்யை சீண்டி சீமான் பேட்டி தந்துள்ளார்.. இதற்கு விஜய் ரசிகர்கள் மறுபடியும் எந்தமாதிரியான எதிர்வினையாற்ற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications