இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
சென்னை: 1957-ம் ஆண்டு முதுகுளத்தூர் ஜாதிய மோதலில் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விவகாரம் புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. சீமானின் இந்தப் பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: முத்துராமலிங்க தேவரை ஒரு பஞ்சாயத்துக்கு கூப்பிடுகின்றனர். அவர் பஞ்சாயத்துக்கு வரவில்லை..வேறு வேலை இருக்கிறது என்கிறார். பின்னர் பஞ்சாயத்துக்கு சென்ற முத்துராமலிங்க தேவிரிடம் ராணுவத்தில் பணி செய்துவிட்டு வந்த இமானுவேல் சேகரன் எழுந்து கேள்வி கேட்கிறார். இதனால், தான் நான் வரமாட்டேன் என்றேன்.. சின்ன சின்ன பயலுக எல்லாம் கேள்வி கேட்கிறானுக என்று சொல்லிவிட்டு முத்துராமலிங்க தேவர் கிளம்பிவிடுகிறார்.

இமானுவேல் சேகரன் படுகொலை- முத்துராமலிங்க தேவர்- பெரியார்
இதனால் நம்முடைய அய்யா முத்துராமலிங்க தேவரை கேள்வி கேட்டுவிட்டார்களே என்ற கோபத்தில் இமானுவேல் சேகரனை பக்கத்தில் இருந்த இளைஞர்கள் வெட்டி கொலை செய்துவிடுகின்றனர். முத்துராமலிங்க தேவருக்கும் இமானுவேல் சேகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அது தெரியாமல் நடந்துவிடுகிறது. ஆனால் பெரியார்தான் திரும்ப திரும்ப சொல்லி காமராஜரை வலியுறுத்தி முத்துராமலிங்க தேவரை கைது செய்ய வைத்தார். இவ்வாறு சீமான் பேசினார்.
1957-ல் முதுகுளத்தூரில் நடந்தது என்ன? சீமானுக்கு வன்னி அரசு கண்டனம்
சீமான் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது:
கடந்த 1957 ல் முதுகுளத்தூரில் பெரும் பதற்றம் ஏற்படுகிறது.இரண்டாவது பொதுத்தேர்தலை ஒட்டி எழுந்த பதற்றம் அது. முகவை தலித்மக்கள் அப்போது காங்கிரசை ஆதரித்தனர். திரு.உ.முத்துராமலிங்கம் அவர்கள் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) பார்வர்ட் பிளாக் சார்பாக தேர்தலில் நின்றார்.
தேர்தலில் பள்ளர்கள் ( தேவேந்திர குல வேளாளர்கள்) உ.முத்துராமலிங்கத்திற்கு வாக்களிக்காததால் அவர்களது உடமைகளை தேவர் சாதியினர் சூறையாடினர்.
உச்ச பட்சமாக கடம்பாங்குளத்தில் 9 பள்ளர்களை தேவர்சாதியினர் தூக்கி பத்ரகாளிக்கு பலியிடப்போவதாக அறிவித்தனர்; சட்டசபையில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு தமிழகம் முழுவதும் பதற்றமானது.
முதுகுளத்தூர் பகுதியில் பள்ளர்-தேவர் உரசல் மோதல் வெடித்தது.இதனை தடுக்கும்பொருட்டு ராமநாதபுரம் மாவட்டக் கலெக்டர் சி.வி.ஆர் பணிக்கர் சமாதனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். 1957 செப்டம்பர் 10 ம் தேதி முதுகுளத்தூரில் சமாதானக்கூட்டம் கூட்டப்பட்டது. ( இந்தக்கூட்டத்தை தான் பஞ்சாயத்து என சொல்கிறார் சீமான்)
இக்கூட்டத்தில் திரு.பெருமாள் பீட்டர், திரு.இம்மானுவேல் சேகரன் திரு.உ.முத்துராமலிங்கம் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) உள்ளிட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உ.முத்துராமலிங்கம் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) சமாதானக்கூட்டத்திற்கு காலதாமதத்துடன் வந்தார்.
பெருமாள் பீட்டரும்,இம்மானுவேலும் உ.முத்துராமலிங்கம் வந்தபோது எழுந்து வணக்கமிடமில்லை.மற்றவர்கள் எழுந்து வணக்கமிட்டனர்.
உ.முத்துராமலிங்கம் பள்ளர் சாதி பிரதிநிதியாக இம்மானுவேலை ஏற்க மறுத்தார்.பரமக்குடி தொகுதியின் பார்வர்ட் பிளாக் எம் எல் ஏ வான பெருமாள் குடும்பனை பள்ளர் பிரதிநிதியாக ஏற்பதாக சொன்னார். இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.கலெக்டர் தலையீட்டினால் தனித்தனி சமாதானத் தாள்களில் இருவரும் கையொப்பமிட்டனர்
சமாதானக்கூட்டம் முடிந்து கோபத்தோடு வெளியேறிய உ.முத்துராமலிங்கம் தனது ஆதரவாளர்களைப்பார்த்து " ஒரு பள்ளப்பயலை எனக்கு சமமா வளர்த்துவிட்டீங்களே" என் கோபத்துடன் பேசினார்.இதன் விளைவாக அடுத்தநாள் செப்டர்பர் 11 ம் தேதியே இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் உ. முத்துராமலிங்கமும் கைது செய்யப்பட்டார். உண்மை இப்படி இருக்க, ஏதோ பஞ்சாயத்துக்கு அழைத்து,
தெரியாமல் கொலை நடந்ததாக திசை திருப்புகிறார் சாதி வெறியர் சீமான்.
முழுக்க முழுக்க சாதி வெறியால் திட்டமிட்டு நடைப்பெற்ற படுகொலை என அன்றைக்கே ஊடகவியலாளர் தினகரன் அம்பலப்படுத்தியுள்ளார்.
சாதி வெறியர்களை விட ஆபத்தான பேர்வழி தான் சீமான் என்பதை இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
-
திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டி ஏன்? ஸ்டாலின் - விஜய் தான் காரணமா? பின்னணியில் 3 முக்கிய மேட்டர் -
விசிகவில் 3 சிட்டிங் எம்எல்ஏவுக்கு சீட் மறுப்பு.. நேரடியாக களமிறங்கும் திருமாவளவன்.. பாவம் ஷாநவாஸ்! -
வேட்பாளரானார் திருமாவளவன்.. விசிக சார்பில் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications