சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பச்சை"யா பூணூல் தெரியுது.. "வாரியார்" நிலைமை தெரியுமில்ல.. மதுரை ஆதீனத்துக்கு வார்னிங் தந்த சுப.வீ.

சுப வீரபாண்டியன் மதுரை ஆதீனத்தை எச்சரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என பூணூல் போட்டவர்கள் பேசினால் பச்சையாக தெரிந்துவிடும் என்பதனால், பூணூல் போடாத மதுரை ஆதீனம் போன்ற சாமியார்களை வரவழைத்து பேசுகிறார்கள்... அண்ணாவை பற்றி பேசினால், இனி அவ்வளவுதான்" என்று மூத்த தலைவர் சுப.வீரபாண்டியன் மதுரை ஆதீனத்தை எச்சரித்துள்ளர்.

கிருபானந்த வாரியாருக்கு அன்று திமுகவினரால் நடந்தது என்ன..? - அண்ணா பற்றி என்ன பேசினார் தெரியுமா?கிருபானந்த வாரியாருக்கு அன்று திமுகவினரால் நடந்தது என்ன..? - அண்ணா பற்றி என்ன பேசினார் தெரியுமா?

மதுரை துறவிகள் மாநாடு 2 நாட்கள் மதுரையில் கடந்த வாரம் நடைபெற்றது.. அப்போது மதுரை ஆதீனம் தந்த ஒரு பேட்டியானது, அதிர்வலையை உண்டாக்கி வருகிறது.. அப்போது அவர் பேசியதாவது:

"தமிழ்நாட்டில் பண்பாடு கலாச்சாரமே கோவிலுக்குள் தான் உள்ளது. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள்.

துறவியர்கள்

துறவியர்கள்

நாங்கள் அரசியல் பேசாமல் வேறு யாரு பேசுவது? முதலில் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை..? இந்துசமய அறநிலையத்துறை கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள். அந்த பணம் முழுவதும் கோவிலுக்கு செல்வதில்லை.. இந்துக்களை பாதுகாக்க அனைத்து ஆதீனங்களும் துறவியர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.. ஆதீனம் என்றால் பதுங்கி கிடக்க முடியாது... ஜால்ரா அடிக்க முடியாது. ஒரே குறிக்கோள், இந்துக்களுக்கு ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும்...

 தக்கார்கள்

தக்கார்கள்

அரசியல்வாதிகள்தான் கோவில்களில் தக்கார்களாக உள்ளனர். இதனால் கோவில்களுக்குள்ளும் அரசியல் புகுந்து விட்டது. கோவில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளைக்கூடாராமாக மாறிவிட்டது.. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலத் திருமந்திரம்... ஆனால், இதை அண்ணா சொன்னது என்கிறார்கள். பரவாயில்லை திருடி எடுத்து போட்டாலும் சந்தோசம். இப்படியெல்லாம் ஆன்மீகத்திலிருந்து திருடிக் கொள்கிறார்கள். திருடிக்கொண்டு திராவிடம் திராவிடம் என பேசிக்கொள்கிறார்கள்'' என்று கடுமையாக பேசியிருந்தார்.

ஆதீனம்

ஆதீனம்

ஆதீனத்தின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் சரமாரியாக பதிலளித்து வருகிறார்கள்.. விசிகவின் வன்னியரசு முதல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன் வரை கேள்வி கேட்டு வருகிறார்கள்.. அந்த வகையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியனும் கொந்தளித்து போயுள்ளார்.. இதுகுறித்து ஒரு வீடியோவும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் உள்ளதாவது:

 வெறுப்பரசியல்

வெறுப்பரசியல்

மதுரை ஆதீனம் மிக கடுமையாக அண்ணாவையும் திராவிட இயக்கத்தையும் விமர்சித்து பேசியிருக்கிறார். துறவியர் மாநாடு என்றால் அன்பும் அருளும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றுதான் சொல்வார்கள்.. ஆனால் அவர்கள் பேச்சு முழுக்க முழுக்க திராவிட இயக்கத்திற்கு எதிரான வெறுப்பு அரசியல் பரப்பப்படுகிறது.. அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியை பார்த்து வெறுப்பில் விமர்சிக்கின்றனர்.. வெறுப்பு வார்த்தைகள் நாமெல்லாம் உயிராக போற்றுகிற நமது அண்ணாவுக்கு எதிராகவும் வந்துள்ளது.

 பூணூல் போட்டவர்கள்

பூணூல் போட்டவர்கள்

அண்ணாவையே இழிவாக பேசியிருக்கிறார் மதுரை ஆதீனம்.. இதன் மூலம் திட்டமிட்டு நாடெங்கும் மதக்கலவரத்தை விதைக்கிறார்கள்... எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என பூணூல் போட்டவர்கள் பேசினால் பச்சையாக தெரிந்துவிடும் என்பதனால், பூணூல் போடாத மதுரை ஆதீனம் போன்ற சாமியார்களை வரவழைத்து பேசுகிறார்கள்... பேரறிஞர் அண்ணாவை குறிப்பிட்டு மதுரை ஆதீனம் பேசும்போது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலர் திருமந்திரம், ஆனால் அதை அண்ணா திருடிக்கொண்டு போய் விட்டார் என்பது போல ஆதீனம் பேசுகிறார்.

 20,000 புத்தகங்கள்

20,000 புத்தகங்கள்

அண்ணாவின் பரந்துபட்ட படிப்பு பற்றி மதுரை ஆதீனத்திற்கு தெரியுமா? அவருடைய அறிவுக்கு முன்னால் உங்களுடைய அறிவு துளியளவாவது ஈடாகுமா? அவர் உண்மையிலேயே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்தவர்... அவர் பேசும்போது, அத்தனை மேற்கோள்கள் வந்துவிழும்.. ஆனால் அவர் பேசுவதற்கு எல்லாம் நீங்கள் அண்ணா திருடி விட்டார் என்று சொல்வதற்கு இங்கு எந்த கொம்பனுக்கும் உரிமை இல்லை. அவ்வளவுதான்.. இனி மதுரை ஆதீனம் எல்லை மீறி தொடர்ந்து பேசினால் திமுகவில் இருக்கிற கோடிக்கணக்கான இளைஞர்கள் மட்டுமல்ல, அண்ணா திமுகவில் இருக்கிற இளைஞர்களும் உங்களை எதிர்ப்பார்கள். ..

 தமிழ்க்கடல்

தமிழ்க்கடல்

கிருபானந்த வாரியாருக்கு தமிழகத்தில் எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு உண்டு... காரணம், அவர் மிகப்பெரிய தமிழ்கடல்.. அப்படிப்பட்டவர், அன்று அண்ணாவை எதிர்த்தபோது அவரின் நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மதுரை ஆதீனம் பேசும்போது, நாங்கள் அரசியல் பேசக்கூடாதா என்று கேட்கிறார்.. அரசியல் பேசுங்கள்.. ஆனால், வெளிப்படையாக பேசுங்கள்..

 தம்பி சீமான் - பாஜக

தம்பி சீமான் - பாஜக

அன்புத்தம்பி சீமான் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார் என பேசுகிறார். நீங்கள் பேசுங்கள் அது என்ன அன்புத்தம்பி சீமான், நீங்கள் எல்லோரும் ஒரே கூட்டம் தான் என்று எங்களுக்கு தெரியும். அரசியல் பேசுங்கள், தெருவுக்கு தெரு பாரதீய ஜனதாவின் கொடியை தூக்கிக் கொண்டு வாருங்கள், நீங்கள் வாருங்கள் நாங்கள் உங்களை பார்க்கிறோம்.. ஆனால், இனிமேம்ல, திமுகவை பற்றியோ, எங்கள் முதல்வர் பற்றியோ, அறிஞர் அண்ணாவை பற்றியோ, கலைஞரை பற்றியோ, இழிவாக பேசினால், திருப்பி நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் வரும்.. இதுவரை எங்கள் மரியாதையை தந்து கொண்டிருக்கிறோம்.., எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு" என்றார். மூத்த தலைவர் சுபவீ-யின் இந்த இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

English summary
senior leader Suba veerapanidan slams bjp and madurai aadeenam and gives last warning சுப வீரபாண்டியன் மதுரை ஆதீனத்தை எச்சரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X