ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு.. திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சஸ்பெண்ட் - துரைமுருகன்
சென்னை: தமிழ்நாட்டு ஆளுநர் ஆர் என் ரவி குறித்து அவதூறாக பேசிய சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சிக்கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் வாரியாக அன்பழகன் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக பேச்சாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்று பேசி வருகின்றனர்.

ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு
அந்த வகையில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்என் ரவி குறித்து அவதூறாகவும், கொச்சையாகவும் பேசினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு ஆளுநர் மாளிகை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது
சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திமுக மேடையில் அநாகரீகமாக பேசினால் அது கண்டித்தக்கது என்றார். மேலும் மா சுப்பிரமணியன் பேசுகையில், "திமுக மேடையில் அநாகரீகமாக பேசினால் அது கண்டிக்கத்தக்கது. யாராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் பேசுவதை திமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதுபோன்ற செயல்பாடுகளை முதல்வர் ஆதரிக்க மட்டார்.

நிச்சயம் அவர் மீது நடவடிக்கை
திமுகவில் இருப்பவர்கள் யாரும் இதுபோன்ற அநாகரீக செயலை விரும்புவது இல்லை. நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைக் கழகத்திற்கு நானும் பரிந்துரைப்பேன். பேச்சாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்து பேச வேண்டும். யாரோ ஒரு பேச்சாளர் பேசியதற்கு ஆளுநர் மாளிகையே புகார் அளித்துள்ளது வியப்பாக உள்ளது. மற்ற கட்சிகளில் உள்ள பேச்சாளர்கள் 100 சதவீதம் பேர் அநாகரிகமாகத்தான் பேசுகின்றனர். அவர்கள் யாரையும் அந்தக் கட்சிகள் கண்டிப்பது கிடையாது.

கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
ஆளுநர் குறித்து பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி என்ற பேச்சாளருக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா என தெரியவில்லை" என்று மா சுப்பிரமணியன் கூறியிருந்தார். சிவாஜி கிருஷ்ண மூர்த்தியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில், திமுகவில் இருந்து தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

துரைமுருகன் அறிக்கை
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன?












Click it and Unblock the Notifications