எல்லா தப்பையும் நீங்கதான் பண்ணீங்க! காங்கிரஸ் ஆபீஸில் களைகட்டிய பஞ்சாயத்து! எம்எல்ஏவுக்கு கல்தா?
சென்னை : காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் காரணமாக அந்தக் கட்சியின் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவான ரூபி மனோகரனை கட்சியிலிருந்து நீக்க தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பாடு குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வருகை புரிந்தனர்.
அப்போது, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை நீக்கக்கோரி 300 -க்கும் மேற்பட்டவர்கள் கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

கோஷ்டி மோதல்
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாததால் போராட்டக்காரர்கள் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவின் போது போராட்டக்காரர்கள் மாவட்ட தலைவர் கே பி கே ஜெயக்குமாரை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர். மூன்று மணி நேரம் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்,

கடும் தாக்குதல்
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திடிரென கைகலப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாகி அடிதடியாக மாறியது. அப்போது கட்டையால் தாக்கி கொண்டதால் களக்காடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வா, நெல்லை மாவட்ட நிர்வாகிகள் டேனியல், ராபர்ட் ஆகிய மூன்று பேரும் ரத்தம் சொட்ட சொட்ட அழைத்து செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த 100 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விரைந்து வந்து பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பெரும் பரபரப்பு
மேலும், திருநெல்வேலியிலிருந்து வந்தவல்களை அவர்கள் வந்த வாகனத்திலேயே ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலுக்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான ரூபி மனோகரன் தான் எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில் மோதல் காரணமாக அந்தக் கட்சியின் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவான ரூபி மனோகரனை கட்சியிலிருந்து நீக்க தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரூபி மனோகரன்
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரனே காரணம். அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அவர் கட்சியில் இருந்தும் முழுமையாக நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. இதனால் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications