நாளைக்கு டும்டும்! வேட்டி சட்டை கட்டிதான் வரனும்! தண்ணீர் பாட்டிலில் சிரிக்கும் விக்கி - நயன்தாரா.!
சென்னை : தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா திருமணம் நாளை நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கு வருகை தரும் அனைவரும் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வரவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் பாட்டிலில் கூட விக்னேஷ் சிவன் நயன்தாராவின் படங்கள் இடம்பெற்றுள்ளதாக சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்பது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் விக்கி - நயன்தாரா இருவருமே இதுகுறித்து பதிலளிக்காமல் வந்தனர்

நடிகை நயன்தாரா
இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம்'' எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின.
Recommended Video

விக்னேஷ் சிவன் - நயன்தாரா
ஆனால் இப்போது இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் நாளை நடக்கவுள்ளது. இதற்காக மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட சிலருக்கு திருமணத்தன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சி தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள், அரசியல் புள்ளிகள், நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோரின் நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை திருமணம்
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பார்க்கலாம். பாலிவுட் பிரபலங்களை போல தனது திருமணத்தையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது திருமண நிகழ்வை பிரபல ஓடிடி நிறுவனத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஏற்பாடுகள் தீவிரம்
குறிப்பாக திருமண ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தும் அளவுக்கு விக்னேஷ் சிவன் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என கூறிய வட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக கூறிய விக்னேஷ் சிவன், தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதாக கூறியிருந்தார்.மேடை அலங்காரம் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழக திரையுலகின் முன்னணி கலை நிபுணரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆடை கட்டுப்பாடு
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு சில அன்பான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆண்கள் அனைவரும் வேட்டி சட்டையிலும் பெண்கள் அனைவரும் பாரம்பரியமான சேலை அணிந்து வரவேண்டும் என அழைப்பிதழில் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக திருமணங்களில் கலந்து கொள்பவர்களுக்கு டிரஸ் கோட் எடுப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் தமிழர் முறைப்படி வேட்டி சட்டையில் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் பாட்டிலில் படம்
திருமணத்தில் ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து தனித்துவமாக இருக்க வேண்டும் என்று, திருமண விழாவிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டலில் அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படம் ஒட்டிய தண்ணீர் பாட்டில்களை வழங்கவுள்ளனர். வட மாநிலங்களைப் போல மெஹந்தி நிகழ்ச்சியுடன் நயன்தாரா திருமணம் நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் நட்சத்திர ஜோடியான இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications