சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபாஷு.. "மாஜி"யை தட்டி தூக்கிய முருகன்.. பாஜகவில் விரைவில் இணைகிறாராம்.. பரபர கமலாலயம்..!

தமிழக பாஜகவில் இணைய உள்ளாராம் கராத்தே தியாகராஜன்

Google Oneindia Tamil News

சென்னை: சத்தமே இல்லாமல், ஒரு விஷயத்தை நடத்தி முடித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.. திமுகவில் முக்கிய பிரமுகராக கராத்தே தியாகராஜனை பாஜகவுக்கு கொண்டு வந்துள்ளார்.. விரைவில் கராத்தே பாஜகவில் இணைய போகிறாராம்..!

ரஜினி மீது அளவுகடந்த பிரியத்தையும், மரியாதையையும் வைத்திருப்பவர் கராத்தே தியாகராஜன்.. ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.. ஒருகட்டத்தில் இவர், ரஜினியை ஒரு முதல்வர் போலவே பார்க்க ஆரம்பித்து அவருடன் வலம் வந்தவர்.

ரஜினிதான் அடுத்த முதல்வர்.. அடுத்தடுத்து இதெல்லாம் நடக்கப் போகுது என்று ரொம்ப நம்பிக்கையாக இருந்தவர், பேசிக் கொண்டிருந்தவர். ரஜினியை நம்பி காங்கிரஸை கூட துரத்தி விட்டு வந்தவர். ஆனால், ரஜினியின் திடீர் அரசியல் முடிவால் அதிர்ந்து போய்விட்டார்.. இதற்கு பிறகு இன்று எங்கு போவது, அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தார்..

பாஜக

பாஜக

ஒருகட்டத்தில் ஆனால், அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்.. பிறகு அதிமுக அல்லது பாஜகவில் இவர் இணையலாம் என்றும் தகவல்கள் கசிந்தன.. இந்நிலையில், பாஜகவில் கராத்தே இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. முன்னாள் சென்னை மாநகராட்சி துணை மேயரான கராத்தே தியாகராஜன், தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்து பேசி இருக்கிறார்..

தேதி

தேதி

பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், என்னைக்கு கட்சி சேருவது என்ற தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது. எல்.முருகனை பொறுத்தவரை ஒரு விஷயத்தை பாராட்டியே ஆக வேண்டும்.. மக்கள் பிரச்சனைகளை அவ்வளவாக கையில் எடுக்கவில்லை என்றாலும், கட்சியை பலப்படுத்துவதில் முருகனின் செயல்பாடு பாராட்டத்தக்க வகையில் உள்ளது.

 தியாகராஜன்

தியாகராஜன்

குஷ்பு உட்பட பலதரப்பட்ட பிரமுகர்களை கட்சியில் இணைத்து வருகிறார்.. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை கட்சியில் இணைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.. இந்த பிரமுகர்களால் தாமரை எதிர்பார்த்தபடி மலர போவதில்லை என்றாலும், பிரச்சார நேரங்களில் நிச்சயம் இவர்கள் அனைவரும் திரும்பி பார்க்க வைப்பார்கள் என்று நம்பப்படுகிறது. பிரதமர் மோடி 14-ந் தேதி சென்னை வருகிறார்... அதற்குள் மேலும் சில முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.

பொறுப்பு

பொறுப்பு

ஆனால், கராத்தே தியாகராஜனை பொறுத்தவரை, சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல, திறமையான கராத்தே பயிற்சியாளராவார்... அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் ஏற்கனவே இருந்தவர்.. சென்னை மாநகர முன்னாள் மேயராகவும் இருந்தவர்.. அதிக காலம் இவர் இருந்தது காங்கிரஸ் கட்சியில்தான்.. சென்னை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

பலம்

பலம்

ஒருவேளை ரஜினி கட்சி தொடங்கி இருந்தால், கராத்தே தியாகராஜன் அவருக்கு மிகப் பெரிய பலமாக இருந்திருப்பார்.. எப்படி மறைந்த வெற்றிவேல் தினகரனுக்கு உறுதுணையாக இருந்தாரோ அதேபோல கராத்தேவும் திகழ்ந்திருப்பார்.. இப்போது பாஜக பக்கம் கராத்தே வருகிறார் என்றால், அதற்கான வியூகங்களுடன் தான் களமிறங்குவார் என்று நம்பப்படுகிறது..!

English summary
Sources say that Karate Thiyagarajan will join in BJP Soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X