Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 சீக்ரெட் சர்வே.. ரிப்போர்ட் கேட்ட முதல்வர்.. ‘யாருக்கு ஜாக்பாட்?’ தீயாக இறங்கும் எம்.எல்.ஏக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மட்டத்தில் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது, அமைச்சர்கள் மீது எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருக்கிறார்களா, எம்.எல்.ஏக்களின் பெர்ஃபாமன்ஸ் எப்படி என்பதையெல்லாம் அறிய ரிப்போர்ட் கேட்டிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

எம்.எல்.ஏக்கள் இந்த பருவமழை காலத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்றும், மக்கள் மத்தியில் ஒவ்வொரு தொகுதியிலும் ஆளுங்கட்சி மீதான கருத்துகள் எப்படி இருக்கின்றன என்றும் அறிந்து அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்கிறாராம்.

உளவுத்துறையின் இந்த ரிப்போர்ட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து நோட்ஸ் போயிருக்கிறதாம்.

இதற்கிடையே, முதல்வருக்கு மிக நெருக்கமான அதிகாரப்புள்ளி, முதல்வர் ஆலோசனைப்படி, தனியாக எம்.எல்.ஏக்களை அழைத்து கருத்துகளைக் கேட்டு வருவதாகவும் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது.

 ஒன்றரை ஆண்டு ஆட்சி

ஒன்றரை ஆண்டு ஆட்சி


தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பதவி ஏற்றார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை அமைச்சர்கள் பலர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, கடுமையான விவாதங்கள் எழுந்தபோதும் அமைச்சரவை மாற்றம் நடைபெறவில்லை. சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாகா மட்டும் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

புதியவர்களுக்கு இடம்?

புதியவர்களுக்கு இடம்?

அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக கிடைத்த ரிப்போர்ட், மாவட்டத்தில், எம்.எல்.ஏக்கள் கட்சியினர் மத்தியில் இருக்கும் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற இருப்பதாகவும் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரு சில அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றப்படலாம் என்றும், ஒரு சில எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் புதிதாக இடம் கிடைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்களிடம் கருத்து

எம்.எல்.ஏக்களிடம் கருத்து


அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்கனவே உளவுத்துறை அறிக்கை கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், பாஸ் மார்க்குக்கு கீழே இருப்பவர்களின் பட்டியல் முதல்வரின் டேபிளில் மேலே இருக்கிறதாம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும், அமைச்சரவையில் இருந்து வெளியே தள்ளப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையே தான், திமுக எம்.எல்.ஏக்களிடமும், அமைச்சர்கள் பற்றி கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறதாம்.

எல்லாமுமான புள்ளி - சர்வே 1

எல்லாமுமான புள்ளி - சர்வே 1

முதல்வர் ஸ்டாலினுக்கு எல்லாமும் ஆன அதிகாரமிக்க புள்ளி, நேரடியாக எம்.எல்.ஏக்களை அழைத்து பேசி வருகிறாராம். ஆட்சி பற்றி தொகுதி மக்களின் கருத்து என்னவாக இருக்கிறது, நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்றெல்லாம் கேட்டு வருகிறாராம். முதற்கட்டமாக சில பத்து எம்.எல்.ஏக்களிடம் அந்தப் புள்ளி நடத்திய பேச்சின்போது, பெரும்பாலானவர்கள், தங்கள் மாவட்ட அமைச்சர்கள் பற்றி குமுறிக் கொட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள் மீது அதிருப்தியில் எம்.எல்.ஏக்கள்

அமைச்சர்கள் மீது அதிருப்தியில் எம்.எல்.ஏக்கள்

அமைச்சர்கள் தங்களை மதிப்பதே இல்லை, தங்கள் தொகுதி பிரச்சனை தொடர்பாக அதே துறை சார்ந்த தங்கள் மாவட்ட அமைச்சரிடம் சொன்னால் கூட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை, மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியாதுதான், நாங்களே ஃபில்டர் செய்துதான் அமைச்சர்களிடம் கொண்டு போகிறோம், நாங்கள் சொல்வதிலும் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை என பொங்கித் தீர்த்திருக்கிறார்களாம்.

மேல் மட்டத்தில் க்ளீயர்

மேல் மட்டத்தில் க்ளீயர்

இதை சீரியஸாக கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கும் முதல்வருக்கு நெருக்கமான அந்தப் புள்ளி, தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏக்களிடமும் பேசி வருகிறாராம். இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்தில் எம்.பி தேர்தல் வரவிருக்கும் நிலையில், அதற்குள் கட்சிக்குள் மேல் மட்டத்தில் நிலவும் சிக்கல்களைத் தீர்த்துவிட வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் திட்டமாம். அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையில் அந்த முக்கிய புள்ளி ஈடுபட்டு வருகிறாராம்.

 சர்வே 2 - ஓடி ஓடி

சர்வே 2 - ஓடி ஓடி

இந்த ரிப்போர்ட் ஒரு புறம் இருக்க, முதல்வர் இன்னொரு சர்வே நடத்தவும் உத்தரவு போட்டிருக்கிறாராம். பருவமழைக் காலத்தில் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பது அவசியம், அத்தனை தொகுதிகளிலும் எம்.எல்.ஏக்கள் எப்படி செயல்படுகிறார்கள் என ஒரு சர்வே எடுங்கள் என உளவுத்துறைக்கு உத்தரவு போயிருக்கிறதாம். யார் ஓடி ஓடி வேலை செய்வது, யார் நோகாமல் இருந்து கட்சியினர், பொதுமக்களின் அதிருப்தியைச் சம்பாதிப்பது என்றெல்லாம் பல ஆங்கிள்களில் இந்த சர்வே எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

ஜாக்பாட் அடிக்கலாம்

ஜாக்பாட் அடிக்கலாம்

இந்த சர்வே ரிப்போர்ட்கள் முதல்வர் ஸ்டாலினின் கைக்குக் கிடைத்த பிறகு, எம்.எல்.ஏக்களின் சிறப்பான செயல்பாடுகள் அடிப்படையில் சிலருக்கு ஜாக்பாட் அடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமைச்சரவையில் ரெட் மார்க் வாங்கியிருக்கும் சிலருக்கு பதிலாக, சூப்பர் கிரேடு வாங்கும் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறார், இதனால், எம்.எல்.ஏக்கள் சுறுசுறுப்பாகக் பறக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+