இட்லி மாவு பாக்கெட் வாங்கறீங்களா? தோசைக்கு ஊற வைத்தால் இதை சேர்க்கறீங்களா? ரகசியம் தெரிஞ்சுக்கணும்
சென்னை: தென்னிந்திய மக்களின் காலை உணவில் தவிர்க்க முடியாத அங்கமாக இருப்பது இட்லி. எளிதில் செரிமானமாகும் உணவு என்று போற்றப்படும் இட்லி, உண்மையில் ஆரோக்கியமானதா அல்லது அதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பொதுவாக அரிசி மற்றும் உளுந்தம்பருப்பை சுமார் 12 மணி நேரம் ஊறவைத்து அரைக்கும்போது, அது இயற்கையான நொதித்தல் முறைக்கு உட்படுகிறது.. இந்த செயல்பாட்டின் மூலம் மாவில் புரோ பையோடிக்ஸ் எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உருவாகின்றன.

இட்லிக்கு ஊற வைக்கறீங்களா
இதில் வைட்டமின் B12 உருவாவதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், குடலில் உள்ள தீய பாக்டீரியாக்களை அழித்து செரிமான மண்டலத்தை சீராக வைக்கிறது..
மேலும் இது மூளையுடன் தொடர்பு கொண்டு பதற்றத்தைத் தணிக்கவும், நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் நோய் எதிர்ப்பு சக்தியை உடல் கிரகிக்கவும் உதவுகிறது.. நம்முடைய ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உளுந்தம் பருப்பு பெரும் துணையாக இருக்கிறது..
இட்லியில் சேர்க்கப்படும் உளுந்து, எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.. குறிப்பாக ஆண்களின் பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் அளவை அதிகரிக்க இது உதவுகிறது.. உளுந்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற பாதிப்புகளையும் தடுக்கிறது.
இட்லி மாவு பாக்கெட்
வெள்ளை உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்து பயன்படுத்தினால், அதன் மேற்புற தோலில் உள்ள Leuconostec Mesenteroides என்ற பாக்டீரியாக்கள் மூலம் கூடுதல் நார்ச்சத்து மற்றும் சத்துக்கள் கிடைக்கும்.. அரிசி இட்லியில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால், நீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு பதிலாக கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
அதேபோல பச்சை பயிறு, கொள்ளு, பாசிப்பருப்பு, அவல் போன்றவற்றைச் சேர்த்தும் மாவு அரைக்கலாம்.. அரிசி இட்லி என்றால் இரண்டுக்கு மேல் சாப்பிடக்கூடாது.. ஆனால் ராகி அல்லது ஓட்ஸ் இட்லி என்றால் மூன்று வரை தாராளமாகச் சாப்பிடலாம்.. இட்லிக்கு பாசிப்பருப்பு மற்றும் சோம்பு சேர்த்த சாம்பார் பயன்படுத்தினால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்..
தோசை சத்துகள்
இக்காலத்து அவசர உலகில் பலரும் பாக்கெட் மாவை நாடுகின்றனர்.. ஆனால் பாக்கெட் மாவு புளிக்காமல் இருக்க அதில் புண்ணுக்கு தடவப்படும் போரிக் ஆசிட் மற்றும் கால்சியம் சிலிக்கேட் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.. இவை உடம்பில் சேரும்போது குடல் ஆரோக்கியம் கெட்டு, வயிற்று வலி, அஜீரணம் மற்றும் இரைப்பை நோய்களை உண்டாக்கும்.
சில பிராண்டுகளில் உளுந்துக்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கின் கழிவுகள் சேர்க்கப்படுவதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.. மேலும் கடைகளில் மாவு அரைக்கும்போது பயன்படுத்தப்படும் நீர் சுத்தமானதா என்பதும் கேள்விக்குறியே.. இது ஆரோக்கியத்திற்கு பெரும் உலை வைத்துவிடும்.
வீட்டில் அரைத்த மாவாக இருந்தாலும் 3 நாட்களுக்கு மேல் வைத்துப் பயன்படுத்தக்கூடாது.. ஏனெனில் மாவு புளித்து நொதிக்கும்போது அதில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.. ஒரு வாரத்திற்கு மேல் மாவைப் பயன்படுத்தும்போது அது நச்சாக மாறிவிடும்.. குறிப்பாக பழைய மாவில் வெந்தயம் சேர்த்திருந்தால் அது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும்.. இது இதய நோய் உள்ளவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும்.. எனவே அவ்வப்போது புதிய மாவு அரைத்துப் பயன்படுத்துவதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது..
சீக்ரெட் டிப்ஸ்
முக்கியமாக இட்லி மாவை ஒரே பாத்திரத்தில் வைத்துத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.. ஒவ்வொரு முறை மாவு எடுக்கும்போதும் அதன் தரம் மாறக்கூடும் என்பதால் சிறு சிறு பாத்திரங்களில் பிரித்து வைத்துப் பயன்படுத்துவது பாக்டீரியா வளர்ச்சியை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும்.
ஆவியில் வேகவைப்பதால் இட்லியில் எண்ணெய் அல்லது கொழுப்புச் சத்துக்கள் இல்லை என்றாலும், அதில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் வெறும் அரிசி இட்லியைத் தவிர்த்து, காய்கறிகள் அல்லது புரதம் நிறைந்த தானியங்களைச் சேர்த்துச் செய்வது கூடுதல் பலனைத் தரும்.
இட்லி மாவில் சிறிதளவு பாசிப்பயறு சேர்ப்பது இரும்புச்சத்தை அதிகரித்து ரத்த செல்களுக்கு ஆக்சிஜனேற்றத்தை வழங்கும்.. ரவா இட்லி செய்பவர்கள் அதில் கேரட் துருவல் சேர்த்துச் செய்வது சுவையையும் சத்தையும் கூட்டும்.. எனவே இட்லி என்றதும் வெறும் அரிசி மாவு என்று மட்டும் நினைக்காமல், பலவிதமான தானியங்களைச் சேர்த்து ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே தயாரித்து உண்பதே புத்திசாலித்தனம் ஆகும்..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications