சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'சுதா ராமன் ஐஎப்எஸ்'.. ஒரே நாளில் டிரெண்டாகும் அதிகாரி.. அவரது வாழ்வில் நடந்த மாற்றங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: பாசிட்டிவ் எண்ணங்கள் வாழ்வையே மாற்றும் வல்லமை கொண்டவை. எத்தனையோ கதைகள், எத்தனையோ பேரின் அனுபவங்களை கேள்வி பட்டிருப்போம். எப்போதும் அதை கேட்பபோம். மருத்துவர் கனவை நினைவேறாமல் போனவர் ஒரு ஐஎப்எஸ் அதிகாரியாக உருவெடுத்துள்ளார். அவரைபற்றி பார்க்கும் முன் சில விஷயங்களை பார்த்துவிடுவோம்.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு முறை மேடையில் சொன்னது போல், பாசிட்டிவ் செய்திகளை பாருங்கள், பாசிட்டிவ் செய்திகளை கேளுங்கள், அது உங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும், நெகட்டிவான விஷயங்களை பார்ப்பதையோ, கேட்பதையோ அடியோடு நிறுத்துங்கள் ஏனெனில் அது உங்கள் மனநிலையை மாற்றிவிடும் என்றார். உண்மைதான் நாம் என்ன பார்க்கிறோமோ, கேட்கிறமோ அதுபோல் தான் நம்முடைய நிமிடங்கள் நகர்கின்றன,

விஜய் பாசையில் சொல்வது என்றால், லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி...
நெகடிவிட்டி எல்லாம் தள்ளி வை பேபி...
ஃபோகஸ் ஆன் வாட் யு ட்ரீம்...
அண்ட் டோன்ட் ஒர்ரி மாப்பி...
பாஸிட்டிவிட்டி உன்ன லிப்ட் பண்ணும் பேபி.,
லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா...
ஆல்வேஸ் பி ஹேப்பி... ஆம் விஜய்யும் ரஜினி சொன்ன அதேவார்த்தையே பாட்டாகவே பாசிட்டிவ் பற்றி பாடினார்.

சரி இதெல்லாம் எதுக்கு காலம் காத்தாலேயே சொல்கிறேன் என்றால், பீலிங் பாசிட்டிவ் எண்ணங்கள் மக்களிடையே விதைக்க வேண்டும் என்பதற்காகத்தான். நெகட்டிவ் எண்ணங்கள் அதிகமாகி மாணவ செல்வங்கள் தவறான முடிவெடுக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் நடிகர் சூர்யா மாணவர்களிடையே நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்று நேற்று பேசிய வீடியோ பலருக்கும் நம்பிக்கை அளித்திருக்கும். நடிகர் சூர்யா சொன்னது போல் பரிட்சை மட்டுமே வாழ்க்கை அல்ல. எந்த பரிட்சையில் தோற்றாலும் வாழ்வில் மிகப்பெரிய உயரத்தை தொட முடியும். பரிட்சைக்கும் வாழ்க்கையும் துளியும் சம்மந்தம் இல்லை. நாம் தோல்வியில் இருந்து பாடங்களை கற்று அடுத்த நிலையில் முன்னேற வேண்டும்.

மருத்துவ கனவு

மருத்துவ கனவு

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரி சுதா ராமன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாசிட்டிவ் எண்ணங்கள் மாணவர்களுக்கு வரவேண்டும் என்பதற்காக தனது கதையை அப்படியே போட்டிருக்கிறார்.அவர் மொழியிலேயே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். "மருத்துவக்கனவு ஆனால் BE Biomedical தான் கிடைத்தது. பின் 21ல் திருமணம் Wiproவில் வேலை. 2 வருடம் கழித்து வேலையை விட்டு பல தடைகளை தாண்டி 2 முறை JIPMER entrance எழுதி தோற்றேன். பின்னர் 1 வயது குழந்தையை விட்டு குடிமைப்பணி தேர்வு எழுத சென்னை வந்த எனக்கு முதல் முயற்சியில் IFS கிடைத்தது.

மாணவர்களே மாறுங்கள்

மாணவர்களே மாறுங்கள்


தோல்விகளும் கேலி கிண்டல்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தான் தர வேண்டும். மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு படித்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக எந்த ஒரு தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும் நிச்சயம் வெற்றி பெறவும் முடியும். மதிப்பெண் மட்டுமே வாழ்கை அல்ல. மாணவர்களிடம் இதை அழுத்தமாக சொல்லுங்கள். மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்" இவ்வாறு கூறி உள்ளார்.

லண்டனில் பணி

லண்டனில் பணி


அவர் தனது இன்னொரு பதிவில், வேறு ஒருவரை (அரட்டை என்று பெயர் உள்ளது) பற்றியும் போட்டுள்ளார். அதையும்பார்ப்போம்.. 96ல் பி்.காம் முடித்ததும் IIM Ahmedabad ல் சேர விரும்பினேன் . ஆனால் நுழைவுத்தேர்வில் தோற்றேன். பின் MComல் சேர்ந்தேன் கூடவே CA . ஆனால் கோச்சிங் போகாமல் முதல் முயற்சியில் தேறினேன். அதன்பின் LLB & CS முடித்து பல வருடம் கஸ்டம்ஸ் எக்சைஸ் கேஸ்களை கவனித்துவிட்டு தற்போது லண்டனில் NHSல் பணி. ஆரம்ப கால IIM entrance தோல்வியை மட்டும் நினைத்திருந்தால் ஒன்றையும் சாதித்திருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

கண்டுகாதீங்க

கண்டுகாதீங்க

மருத்துவர் ஆக விரும்பும் மாணவர்கள் தெரிய வேண்டிய விஷயம். தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வு விவகாரம் இவ்வளவு அழுத்தமாக மாற காரணம்.. இந்தியாவிலேயே அதிகமருத்துவ கல்லூரி உள்ள மாநிலம், அதிக மருத்துவ இடங்கள் உள்ள மாநிலமும், மருத்துவ கட்டமைப்பில் மிகமிக வலுவாக உள்ள மாநிலமும் தமிழ்நாடு. எனவே இந்த விவகாரத்தில் அரசியல் உள்ளது. தேர்வு சரியா தவறா என்ற விவகாரத்திற்கு போக வேண்டாம். போனால் அங்கு அரசியல் வந்துவிடும். எனவே அரசியலை கண்டுகொள்ளாமல் படியுங்கள். எல்லாமே அழகாகும்.

எண்ணம் அழகு

எண்ணம் அழகு

அஜித் பாணியில் முடித்துவிடுவோம். "நாளைக்கு நிம்மதியா நீ இருக்க
இன்னைக்கு இறங்கி செதுக்கிடனும்
உன் எண்ணத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா
எல்லாமே அழகாகும்... சரியாகும்!
வாழு வழ விடு அவ்வளோ தான் தத்துவோம்!"

English summary
Positive thoughts have the power to change lives. We have heard so many stories, so many people's experiences. We will always listen to it. IFS officer sudha ramen who could not remember the dream.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X