நேரா வரேன்.. என்ன சாப்பாடு போடுவீங்க? வீடியோ காலில் கேட்ட முதல்வர்! குறவர் சமூக மாணவி ஸ்வீட் பதில்!
சென்னை: சமூக வலைத்தளங்களில் வைரலான நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோருடன் இன்று முதல்வர் ஸ்டாலின் வீடியோ கால் மூலம் போனில் பேசினார்.
Recommended Video
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி சமீபத்தில் ஒரு வீடியோ மூலம் இணையம் முழுக்க பிரபலம் அடைந்தனர். தங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை குறிப்பிட்டு, அவர்கள் வீடியோ வெளியிட்டு இருந்தனர்.
அதோடு பள்ளியில் தங்களுக்கு ஜாதி ரீதியாக கொடுக்கப்பட்ட அழுத்தம், அதை கடந்து வந்தது எப்படி என்றும் அவர்கள் மூவரும் பேசி இருந்தனர். மேலும் ஆங்கிலத்தில் சரளமாக இவர்கள் உரையாடியதும் கவனம் பெற்றது.

பிழைப்பு
நாங்கள் வேட்டையாடிதான் பிழைக்கிறோம். அதை நான் பெருமையாக சொல்வேன். கஷ்டங்களை கடந்து நாங்கள் சாதிப்போம் என்று பேசிய அந்த மாணவிகள் தங்களின் பொருளாதார நிலையை கூறி உதவி கேட்டனர். இந்த வீடியோ பெரிய அளவில் பிரபலம் ஆனதை அடுத்து மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். அப்போது, அவர்களது கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்தார்.

அங்கிள்
நேற்று இந்த சந்திப்பின் போது மாணவி திவ்யா முதல்வரிடம்.. அங்கிள் உங்களை டிவியில்தான் பார்த்து இருக்கேன். நேரில் பார்க்க சந்தோசமா இருக்கு. நீங்கள் எனக்கு அப்பா மாதிரி. எங்களை கூப்பிட்டு பேசியது மகிழ்ச்சி. உங்களை பார்க்க அழைத்த உடன் பேக்கை போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்தேன். எங்கள் காலனியில் எந்த வசதியும் இல்லை. நீங்கள் வந்து ஒருமுறை பாருங்கள். எங்களுக்கு உதவி செய்யுங்கள். ரொம்ப நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

வீடியோ கால்
இந்த மாணவி தங்கள் பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், மாணவியின் போனுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து வீடியோ கால் செய்யப்பட்டது. தங்கள் பகுதி மோசமாக இருப்பதாக அந்த மாணவி கூறிய நிலையில் வீடியோ காலில் அதை பார்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் போன் செய்தார். இதையடுத்து நரிக்குறவ இன மாணவி திவ்யா தனது வீட்டையும், அதை சுற்றி இருக்கும் சாக்கடை, கழிவு பகுதிகளையும் முதல்வரிடம் காட்டினார்.

உறுதி அளித்தார்
அதன்பின் முதல்வர் ஸ்டாலினிடம் நீங்க ஒருநாள் இங்கே நேரில் வந்து பாருங்கள் என்று கூறினார். அதற்கு உங்களுக்கு என்ன குறைகள் இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்.. ஒரு வாரத்தில் நான் உங்கள் பகுதியை பார்வையிடுகிறேன். நன்றாக படியுங்கள் என்று கூறினார். மேலும் நான் நேரில் வந்தால் என்ன சாப்பாடு போடுவீங்க என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டார்.

சாப்பாடு என்ன?
இதையடுத்து அந்த மாணவி.. நீங்க வந்த உங்களுக்கு கறி சோறு போடுவோம் அங்கிள் என்று கூறினர். வீடியோ காலில் இதையடுத்து முதல்வர் சிரித்தார். இந்த பக்கம் இருந்த சிறுவர்களும் முதல்வர் வீடியோ காலில் பேசுவதை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்தனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், கவலைப்படாமல் இருங்கள்.. உங்களை விரைவில் நேரில் வந்து சந்தித்து, குறைகளை சரி செய்வேன் என்று உறுதி அளித்து போனை துண்டித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications