16000 அடி உயரத்தில் ஒலித்த செந்தமிழ்.. இண்டிகோ விமானியின் அழகு அறிவிப்பு.. பின்னணியில் உருக்கமான கதை
சென்னை: சென்னையிலிருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தின் விமானி தமிழில் அறிவிப்பு வெளியிட்டது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
இரண்டு நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியான விமான வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலானது. இண்டிகோ விமானம் ஒன்றில் விமானி தமிழில் அறிவிப்பு வெளியிடும் வீடியோ ஆகும் இது. மிகவும் தூய தமிழில் இண்டிகோ துணை விமானி பேசியது பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இவரின் விபரங்கள் வெளியாகிறது. இப்படி விமானத்தில் தமிழில் அறிவிப்பை வெளியிட்ட துணை விமானியின் பெயர் இண்டிகோ கேப்டன் பிரியா விக்னேஷ் என்பதாகும். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

சொன்னது என்ன
சென்னை - மதுரை விமானத்தில் துணை விமானி கேப்டன் பிரியா விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பில், கேப்டன் அசோக் சார்பாக நான் பேசுகிறேன்.கடல் மட்டத்தில் இருந்து நாம் இப்போது 16,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறோம். திருச்சி நகரத்திற்கு மேலே நாம் இப்போது சென்று கொண்டு இருக்கிறோம். இன்னும் பத்து நிமிடத்தில் காவேரி ஆறு, காவேரி, கொள்ளிடம் மேலே நாம் பறக்க போகிறோம்.

எங்கே இருக்கிறோம்
காவிரி இரண்டாக பிரியும் காட்சியை மக்கள் விமானத்தில் இருந்து பார்க்க முடியும். நாம் இப்போது ஸ்ரீ ரங்கத்தை கடக்க உள்ளோம். இங்கிருந்து நாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை பார்க்க முடியும். இந்த ஆறுகள் பிரியும் இடத்தில்தான் ஸ்ரீரங்கம் கோவில் அமைந்துள்ளது. அழகர் மலையையும், யானை மலையையும் இரண்டு பக்கமும் நாம் பார்க்க முடியும். இப்போது நாம் மதுரையில் தரையிறங்க உள்ளோம்.

திரும்பினார்
கொஞ்சம் கொஞ்சமாக வலது பக்கம் திரும்பி, உயரத்தை குறைத்துக் கொண்டே செல்வோம். வைகை ஆற்றில் இருக்கும் இரண்டு பாலங்களை நாம் பார்க்கலாம். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உட்பட தமிழகத்தின் வரலாற்று சாதனைகளை நாம் பார்க்க முடியும். வாழ்க தமிழ், வாழ்க பாரதம் என்று அவர் தமிழில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அழகான குரல்
இவரின் குரல் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. அழகான தமிழில் உருக்கமாக இவர் பேசியதை பலரும் வரவேற்று இருக்கிறார்கள். இவர் பேசுவது ஆர்ஜெ இரவு நேரத்தில் பாடுவது போல இருக்கிறது என்று பலரும் பாராட்டி உள்ளனர். இவரின் குரலை பலரும் பாராட்டி உள்ளனர்.

என்ன கதை
இந்த நிலையில் கேப்டன் பிரியா விக்னேஷ் பின் இருக்கும் உருக்கமான கதை குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரின் அம்மா ஆசிரியை. இவரின் அப்பாவோ சாலை ஓரத்தில் துணை கடை போட்டு வியாபாரம் செய்து இருக்கிறார். இவரின் அப்பா அப்போது திருவனந்தபுரத்தில் கடையில் பணியாற்றி வந்தார்.

உதவி பெற்று உள்ளார்
பிரியா விக்னேஷ் விமானியாக படிப்பதற்கே பல லட்சம் செலவு ஆகியுள்ளது. இதற்காக சில இடங்களில் உதவியும் பெற்று இருக்கிறார்கள். இவரின் கனவை நினைவாக்க வேண்டும் என்று இவரின் குடும்பம், உறவினர்கள் எல்லோரும் ஆதரவு அளித்துள்ளனர். எளிமையான குடும்பத்தில் பிறந்த பிரியா விக்னேஷ் கடுமையான உழைப்பு மூலம் விமானியாக உயர்ந்து இருக்கிறார்.

தங்கள் குடும்பம்
அதேபோல் தங்களை குடும்ப சொத்துக்கள், நிலங்கள் என அனைத்தையும் விற்று இவர் படித்து இருக்கிறார் . அனைத்தையும் விற்றுத்தான் பிரியா விக்னேஷ் விமானிக்கு படித்து சிபிஎல் லைசன்ஸ் வாங்கி இருக்கிறார். இப்போதும் கூட இவரின் குடும்பத்தினர் எல்லோரும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்கள். இப்போதும் கூட இவர் மிகவும் எளிமையான நபராகவே குடும்பத்தை நடத்தி வருகிறார். பிரியா விக்னேஷ் தமிழ் மீது அளப்பரிய காதல் கொண்டவர்.

செம வரவேற்பு
இந்த நிலையில் பிரியா விக்னேஷ் தமிழில் அறிவிப்பு வெளியிட்டது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இவரின் அறிவிப்புக்கு தமிழக மக்கள் சிறப்பான ஆதரவு அளித்துள்ளனர். அட தமிழக மக்கள் மட்டுமின்றி இண்டிகோ விமான நிறுவனமும் இவருக்கு பெரிய அளவில் ஆதரவு அளித்துள்ளது . மக்கள் இதை அதிகம் விரும்புகிறார்கள். தொடர்ந்து இப்படியே பேசுங்கள் என்று அந்த நிறுவனம் பிரியா விக்னேஷுக்கு ஆதரவு அளித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications