சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னைக்கும் சம்பவம் இருக்கு -செஸ் ஒலிம்பியாட் ஃபைனல் குறித்து விக்னேஷ் சிவன் கொடுத்த சூப்பர் அப்டேட்

Google Oneindia Tamil News

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதிநாளான இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இதில் பங்கேற்கப்போவதில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்தும் தமிழ்நாடு அரசின் சிறப்பான ஏற்பாடுகள் பற்றியும் சர்வதேச நாடுகளின் செஸ் வீரர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இடி, மின்னலுடன் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்! இடி, மின்னலுடன் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

 இறுதி நாள்

இறுதி நாள்

இதில் இந்தியாவை பொறுத்தவரை மொத்தம் 6 அணிகள் விளையாடின. இதில் 3 ஆண்கள் அணிகளும், 3 பெண்கள் பெண்கள் அணிகளும் பங்கேற்றன. பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கின்றன. இன்று காலை இறுதிச் சுற்று போட்டிகள் தொடங்கி இருக்கின்றன.

 நிறைவு நாள் விழா

நிறைவு நாள் விழா

இன்றுடன் செஸ் ஒலிம்பியாட் தொடர் நிறைவடையும் நிலையில், நிறைவு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. மாலை 6 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. அழைப்பிதழிலும் அவர் பெயர் இடம்பெற்ற நிலையில், திடீரென தோனி இதில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியானது.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மிகச்சிறப்பாக நடைபெற்று உலகளவில் பேசுபொருளானதற்கு முக்கிய காரணம் இயக்குநர் விக்னேஷ் சிவன். பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மனம் மயக்கும் இசை நிகழ்ச்சிகள் என வெளிநாட்டு வீரர்கள், சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள் என அனைவர் மனதையும் கவர செய்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன்

தமிழ் மண் 2 ஆம் பாகம்

தமிழ் மண் 2 ஆம் பாகம்


இதன் விளம்பர பாடலை சிறப்பாக இயக்கிய அனைவரையும் கவர செய்த விக்னேஷ் சிவன், இன்று நடைபெறும் நிறைவு விழாவையும் பிரம்மாண்டமாக இயக்க உள்ளாராம். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கமல்ஹாசன் குரலில் ஒலித்து பலரது கவனத்தை ஈர்த்த தமிழ் மண் ஆவணப்படத்தின் 2 ஆம் பாகம் இன்று திரையிடப்படும் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கிறார்.

English summary
Tamil man documentary part 2 released today in Chess Olympiad - Vignesh Shivan:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X