தமிழகத்தில இன்று 5127 பேருக்கு கொரோனா.. 13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்!
சென்னை : தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 91 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 7,159 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்புடன் 42,801 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த மே மாதம் இரண்டாவது வாரததில் 36 ஆயிரம் என்கிற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு, 5 ஆயிரம் என்கிற அளவிற்கு இன்று குறைந்துள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,65,874 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 7,159 பேர் மீண்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 23,90,783 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 42,801 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் 9 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 91 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் 9 பேரும், கோவை மற்றும் திருச்சியில் 7 பேரும், சேலத்தில் 5 பேரும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். ஈரோடு மற்றும் ராணிப்பேட்டையில் தலா 4பேரும் பலியாகி உள்ளனர். மொத்தம் 32 மாவட்டங்களில் இன்று கொரோனாவால் உயிரழப்பு ஏற்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் யாரும் இறக்கவில்லை.

ஈரோட்டிலும் அதிகம்
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 649 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 530 பேரும், சேலத்தில் 343 பேரும், திருப்பூரில் 316 பேரும், சென்னையில் 308 பேரும், தஞ்சாவூரில் 244 பேரும், செங்கல்பட்டில் 248 பேரும், திருச்சியில் 191 பேரும், நாமக்கல்லில் 198 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை முதலிடம்
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 42801 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதிகபட்சமாக கோவையில் 5608 பேரும், ஈரோட்டில் 4320 பேரும், சென்னையில் 3555 பேரும், சேலத்தில் 2360 பேரும், செங்கல்பட்டில் 2353 பேரும், தஞ்சாவூரில் 2127 பேரும், திருப்பூரில் 1911 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 13 மாவட்டங்களில் மொத்தம் 13 மாவட்டஙகளில் 1000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications