108.. தமிழ்நாடு தாங்காது குருநாதா.. பேனை 12ம் நம்பரில் வச்சாலும்.. இன்று சென்னை வானிலைதான் ஹைலைட்!
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மழைமேகம் கூடுகிடுகிறது.கலைந்த வேறு பகுதிக்கு செல்கிறது.இப்படியே கடந்த சில நாட்களாக போக்குகாட்டி வருகிறது. மக்கள் கடுமையான வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மறுபக்கம் போர்வெல்களில் தண்ணீர் இல்லாமல் அவஸ்தை படுகிறார்கள். வெப்ப அலைகளாலும், தண்ணீர் பிரச்சனையாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட பதிவு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருந்ததாவது:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 6) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 7, 8, 9-ம் தேதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 86 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

ஜூன் 5-ம் தேதி (நேற்று) காலை 8.30மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மற்றும் திருப்பத்தூரில் 4 செ.மீ., திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், அவிநாசி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று முதல் வரும் 9-ம் தேதி வரைகுமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ.வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ.வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications