எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை.. கார்த்தி சிதம்பரம்
சென்னை: மோடியுடன் ஒப்பிடும் போது, ராகுல் காந்தி நிகரான தலைவர் இல்லை என்று கூறியதாக கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம். கார்த்தி சிதம்பரம் அரசியலில் நுழைந்ததில் இருந்து பல்வேறு சிக்கல்களில் சிக்கியிருக்கிறார். இந்த நிலையில், செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய ஒரு கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. கார்த்தி சிதம்பரம் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிடும் போது, ராகுல் காந்தி நிகரான தலைவர் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.

தனது கட்சியில் உள்ள ஒருவரையே குறைத்து மதிப்பிட்டு பேசியது காங்கிரஸ் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை. காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மேலிடத்திற்கே அதிகாரம் உள்ளது. என்னுடைய பேட்டியை முழுமையாக பார்த்தால் நான் என்ன பேசினேன் என்று தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications