தமிழகத்தின் புதிய பொறுப்பு டிஜிபி நியமனம்! தலைமைச் செயலகம் சென்ற வெங்கட்ராமன்!
சென்னை: தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) சங்கர் ஜிவால் வரும் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய டிஜிபி (பொறுப்பு) நியமனம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ஜி. வெங்கட்ராமன், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

சங்கர் ஜிவால் ஓய்வு
- தமிழகத்தின் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு ஓய்வு பெற்ற பிறகு, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார்.
- உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.
- சென்னை காவல் ஆணையராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய இவர், இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றுள்ளார்.
- சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, தமிழக தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய டிஜிபி தேர்வு முறை
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, டிஜிபி பதவிக்கு நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 6 மாதங்கள் பதவியில் இருக்க வேண்டும்.
ஏற்கெனவே பணியில் உள்ள டிஜிபி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, தகுதிவாய்ந்த 10 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (யுபிஎஸ்சி) அனுப்பி வைக்க வேண்டும்.
யுபிஎஸ்சி அந்தப் பட்டியலில் இருந்து மூன்று அதிகாரிகளின் பெயர்களைப் பரிந்துரைத்து மாநில அரசுக்கு அனுப்பும். அதில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமிக்கும்.
புதிய டிஜிபி நியமனத்தில் தாமதம்?
தமிழக அரசு ஏற்கெனவே யுபிஎஸ்சி-க்கு பட்டியலை அனுப்பி வைத்தாலும், மத்திய அரசிடமிருந்து இதுவரை பரிந்துரைப் பட்டியல் வரவில்லை.
இந்தப் பட்டியலில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப் பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், ஜி. வெங்கட்ராமன், வினித் வாங்கடே, சஞ்சய் மாத்தூர் உள்ளிட்ட 10 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
மத்திய அரசின் பரிந்துரைப் பட்டியல் வராத நிலையில், இடைக்கால ஏற்பாடாக ஜி. வெங்கட்ராமன் புதிய பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் அவர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். அது போல் இன்று பணி ஓய்வு பெறும் சங்கர் ஜிவாலும், முதல்வரை சந்திக்க சென்றுள்ளார். பொதுவாக டிஜிபி நியமனத்தின் போது புதிய டிஜிபியும் ஓய்வு பெறும் டிஜிபியும் தலைமைச் செயலகத்திற்கு செல்வது வழக்கம்.
யார் இந்த ஜி. வெங்கட்ராமன்?
- தமிழகத்தைச் சேர்ந்த ஜி. வெங்கட்ராமன், 1968 மே 8-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் பிறந்தவர்.
- பி.ஏ. (வணிகவியல்) மற்றும் எம்.ஏ. (பொது நிர்வாகம்) பட்டம் பெற்றவர்.
- இவர் 1994-ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இவர் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது நிர்வாகத் துறை டிஜிபியாக இருந்து வருகிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த நியமனம்
முதல்வர் ஸ்டாலின் வரும் 30-ஆம் தேதி வெளிநாடு செல்லவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக புதிய டிஜிபி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், புதிய டிஜிபி நியமனம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications