ராமதாஸ் உடன் கூட்டணியை உறுதி செய்தார் சசிகலா! தமிழக நலனுக்காக இணைந்திருப்பதாக அறிவிப்பு
சென்னை: விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன், அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக, ராமதாஸ் தரப்பு பாமகவுடன் இணைந்து தமிழகம், புதுச்சேரி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழக மக்களின் நலனுக்காக கூட்டணி அமைத்திருப்பதாக ராமதாஸ் கூறியிருக்கிறார். கூட்டணி, 234 தொகுதிகளும் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் முழு வேகத்துடன் தயாராகி வருகிறது. மறுபுறம் இரு அணியாக செயல்பட்டு வந்த, பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அணி, அதாவது அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறது.
கட்சிக்கு உரிமை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, தேர்தலுக்கு பிறகு விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ராமதாஸ், கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இப்படி இருக்கையில்தான் சசிகலா, தைலாபுரம் ராமதாஸ் இல்லத்திற்கு சென்று கூட்டணியை பேசி முடித்திருக்கிறார்.
கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, "நாங்கள் புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் வேட்பாளர்கள் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெறுவார்கள்" என்று கூறியிருக்கிறார். அதேபோல ராமதாஸ் பேசுகையில், "எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும். எங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள், கூட்டணியில் இணையலாம்" என்று கூறியிருக்கிறார்.
-
செலவுக்கு ஒரு "25C" தாங்க.. போன் போட்ட வாசனிடம் கறார் காட்டிய எடப்பாடி! பாஜகவை கைகாட்டிய அதிமுக -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
மருமகள் சவுமியாவுக்கு எதிராக வேட்பாளரை அறிவித்த ராமதாஸ்.. வெளியானது 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
தவெக பெண் தொண்டர்கள் மீது மதுபாட்டில் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications