ஜெ. மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 11வது முறையாக கால நீட்டிப்பு.. ஏன், எதனால் தாமதம்?
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்திற்கு மேலும் ஒரு முறை கால நீட்டிப்பு செய்துள்ளது தமிழக அரசு. 11-ஆவது முறையாக ஆறுமுகசாமி ஆணையம் காலநீட்டிப்பு பெறுகிறது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் குறிப்பாக ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய அப்போது கூறப்பட்டது. ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நடைபெறவில்லை.

விசாரணை ஆரம்பம்
அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என, 154 பேரிடம் ஆணையம் தீவிர விசாரணை நடத்தியது. ஆனால் மருத்துவ குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றம் தடை
இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளது அப்பல்லோ மருத்துவமனை. இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். இப்படியாக சட்ட சிக்கல்களால் விசாரணையும் காலதாமதம் ஆகிக்கொண்டிருக்கிறது.

11வது முறை நீட்டிப்பு
இதுவரை 10 முறை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இன்று ஜூலை 24ம் தேதியுடன் 10வது முறையாக செய்யப்பட்ட காலக்கெடு நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று இரவு மேலும் 6 மாதங்கள் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி அதிமுக சீனியர் தலைவர் தம்பிதுரையிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. நீதிமன்ற தடை காரணமாக கடந்த 26 மாதங்களாக விசாரணை நடைபெறாமல் இந்த ஆணையத்துக்கு தமிழக அரசு காலநீட்டிப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3 கோடி செலவு
இதனிடையே ஆறுமுகசாமி ஆணையத்திற்காக இதுவரை அரசு 3 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கால நீட்டிப்பு செய்து கொண்டே செல்வதால் செலவினம் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications