பகவத் கீதை ஆன்மீகம் தேசப்பற்றை போதிக்கிறது..கீதை படித்தால் தனி மனித ஒழுக்கம் உயரும்.. ஆர்.என்.ரவி
சென்னை: பகவத் கீதையை படிக்க, படிக்க நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பகவத் கீதையை மனப்பாடம் செய்ய எளிமையாக அழகாக இயற்றப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். பகவத் கீதையை படித்தால் தனி மனித ஒழுக்கம் அதிகரிக்கும். கீதை படிக்கும் போது நல்லொழுக்கம் கட்டுப்பாட்டினை பெறலாம். இதன் மூலம் எந்த ஒரு செயலையும் நேர்கொண்ட பார்வையுடன் இலக்கை நோக்கி செய்து முடிக்கலாம் என்றும் கீதை ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ரவி தெரிவித்தார்.
பகவத் கீதை கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் 11 வது நாளில், சுக்லபட்ச ஏகாதசி நாளில் அருளப்பட்டது. ஆங்கில மாதத்தில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதம் கீதை ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்த தினத்தை நாம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். அதே போன்று இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட நாளை கீதா ஜெயந்தி என நாம் கொண்டாடுகிறோம்.
மகாபாரதத்தில் குருஷேத்திர போரின் போது பகவான் கிருஷ்ணர், அர்ஜூனனுக்கு உபதேசித்ததே பகவத் கீதை. இது கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி நாளில் அருளப்பட்டது. ஆங்கில மாதத்தில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதம் கீதா ஜெயந்தியை நாம் கொண்டாடுகிறோம். கீதா ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நாளை மோட்ஷ ஜெயந்தி என்றும் சொல்கிறார்கள்.

பகவத் கீதை
மகா விஷ்ணு கிருஷ்ண அவதாரத்தில் விஷ்ணுவின் 9வது அவதாரம் ஆகும். கீதை 700 வாசகங்களைக் கொண்டதாகும். இது மகாபாரதத்தில் பீஷ்ம பர்வம் பகுதியில் குறிப்பிடப்படுகிறது. போர்க்களத்தில் உருவானது பகவத் கீதை. பகவத் கீதை உபதேசிக்கப்பட்டு 5159 ஆண்டுகள் ஆகி விட்டதாக சொல்லப்படுகிறது. பகவத் கீதை, மனிதகுலத்திற்கு இறைவனால் அருளப்பட்ட மிகப் பெரிய பரிசு. வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் மிக எளிமையாக முறையில், எந்த காலத்திலும் கடைபிடிக்கக் கூடிய வகையில் சொல்லப்பட்டது. அடிப்படை மதிப்பு, மனிதனின் கடமைகள், வாழ்க்கை முறை போன்றவற்றை விளக்குவதாக அர்ஜுனனின் கேள்விகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளித்திருப்பார்.

கீதா ஜெயந்தி
2022 ம் ஆண்டில் கீதா ஜெயந்தி, டிசம்பர் 3 ம் தேதி கொண்டாடப்பட்டது. ஏகாதசி திதியிலேயே கீதை உபதேசிக்கப்பட்டது. இந்த ஆண்டு டிசம்பர் 03 ம் தேதியன்று காலை 5.39 மணி துவங்கி, டிசம்பர் 04 ம் தேதி காலை 5.34 வரை ஏகாதசி திதி உள்ளது. இந்த நேரத்தை கணக்கிட்டு கோவில்களில் கீதா ஜெயந்தி கொண்டாட்டங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கீதா ஜெயந்தி நாளில் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டால் வாழ்வில் மேன்மையான இடத்தை பெற முடியும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடைய நினைப்பவர்கள் இந்த நாளில் கீதையை படிக்க துவங்கலாம். இந்த நாளில் சிறப்பு பஜனைகள், பூஜைகள் நடத்தி, அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்குவது வழக்கம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற கீதை ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி மற்றும் சட்டை அணிந்தபடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பகவத் கீதையை மனப்பாடம் செய்யும் வகையில் எளிமையாக அழகாக இயற்றப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பில் இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்துள்ள பெருமை என்றும், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார். மக்களின் பங்களிப்பு அனைத்திலும் இருக்க வேண்டும். இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்தியாவின் பெருமை
அமைதியான உலகத்திற்கு இந்தியா தான் தலைமை பண்பை வழங்கும். இந்தியாவில் வேகமாக வளரும் உலக பொருளாதாரம், வெல்லும். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வேகமாக முன்னேறும். இந்தியா தற்போது ஜி-20 அமைப்புக்கு தலைமையேற்றுள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்துள்ள பெருமை.

தனி மனித ஒழுக்கம் அதிகரிக்கும்
பகவத் கீதையை படிக்க, படிக்க நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பகவத் கீதையை மனப்பாடம் செய்ய எளிமையாக அழகாக இயற்றப்பட்டுள்ளது. பலர் ஈர்க்கப்படுகிறார்கள். எனது ஆரம்பப் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில், என்னை ஊக்குவித்து, நான் எதைப்பெற வேண்டும் என்று நானே அறிய எனக்கு உதவியது அதுதான் என்றார்.
பகவத் கீதையை படித்தால் தனி மனித ஒழுக்கம் அதிகரிக்கும். கீதை படிக்கும் போது நல்லொழுக்கம் கட்டுப்பாட்டினை பெறலாம். இதன் மூலம் எந்த ஒரு செயலையும் நேர்கொண்ட பார்வையுடன் இலக்கை நோக்கி செய்து முடிக்கலாம்.

பகவான் கிருஷ்ணர்
போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு ஏற்பட்ட குழப்பத்தை போக்கியவர் பகவான் கிருஷ்ணன். நமது இலக்கு போரிட்டு வெற்றி பெற்று தேசத்தை ஜெயிக்க வேண்டும். அதனால் ஒரே சிந்தனையுடன் போரிட்டு வெற்றி பெற வேண்டும் என்று கூறியவர் பகவான்கிருஷ்ணன். கீதையை படித்தால் இயற்பியலை எளிதில் கற்கலாம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications