வங்கிக் கணக்கில் மேலும் ரூபாய் 6,000.. BLO ஊதியம் டபுள் மடங்கு ஆனது.. ஊக்கத்தொகையும் உயர்வு!
சென்னை: வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) ஊதியத்தை மேலும் ரூபாய் 6,000 உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, BLO-க்களின் ஆண்டு ஊதியம் ரூபாய் 6,000-ல் இருந்து ரூபாய் 12,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊக்கத் தொகையை ரூபாய் 2,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. BLO ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உயர்வுக்காக ரூபாய் 99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்பணியில் வீடு வீடாக படிவங்களை வழங்குவது, பூர்த்தி செய்த படிவங்களை பெறுவது, இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு குடியேறிச் சென்றவர்களை கண்டறிந்து, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள அரசு அலுவலர்கள் 68,464 பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். தேர்தல் ஆணையம் பிஎல்ஓக்களின் ஆண்டு ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குமாறு அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் தமிழகத்தில் பிஎல்ஓக்களின் ஆண்டு ஊதியம் ரூ.6 ஆயிரத்திலிருந்து, ரூ.12 ஆயிரமாகவும், பிஎல்ஓ மேற்பார்வையாளர்களுக்கு ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாகவும், பிஎல்ஓக்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) ஊக்கத் தொகையை ரூபாய் 2,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. BLO ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உயர்வுக்காக ரூபாய் 99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications