Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்பும் அமைதியும் நிலவட்டும்! தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகர் சதுர்த்தியில் அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விநாயகர் அறிவு, வளம் மற்றும் நல்வாய்ப்பு ஆகியவற்றின் திருவுருவாகப் இந்து மக்களால் போற்றப்படுகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்தில் கூறியிருப்பதாவது;

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

''விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் மகிழ்ச்சியான இத்தருணத்தில், சிறப்பான மற்றும் வளமான எதிர்காலம் அமைந்திட தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அயதக் காரியம் வெற்றியில் முடியும் என்பது இந்து சகோதரர்களின் நம்பிக்கை.''

 காரியங்களில் வெற்றி

காரியங்களில் வெற்றி

''விநாயகர் சதுர்த்தியன்று மக்கள், களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் வைத்து அலங்கரித்து, எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி பெற வேண்டி இந்து சகோதர, சகோதரிகள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு மகிழ்வார்கள். விநாயகர் அறிவு, வளம் மற்றும் நல்வாய்ப்பு ஆகியவற்றின் திருவுருவாகப் இந்து மக்களால் போற்றப்படுகிறார்.''

அன்பும், அமைதியும்

அன்பும், அமைதியும்

''எந்தவொரு நல்ல வேலையையும் தொடங்குவதற்கு முன்னர், விநாயகரை வணங்குவதும், அவர் பெயரைப் போற்றித் துதிப்பதும் இந்து மக்களின் வழக்கமாகும். அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும், பொங்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் உரித்தாக்கிக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சசிகலா ஆதரவாளர்

சசிகலா ஆதரவாளர்

வி.எம்.எஸ். முஸ்தபாவை பொறுத்தவரை தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற பெயரில் இஸ்லாமிய இயக்கம் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டுடன் ஆரம்பக் காலம் முதலே அவர்களுக்காக ஊடக விவாதங்களில் இவர் பங்கேற்று வருவது கவனிக்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+