‛தமிழ்நாடு’.. ஆளுநர் ஆர்என் ரவிக்கு 6 மொழிகளில் பதிலடி கொடுத்த கமல்.. சூடுபிடிக்கும் விவாதம்.. ஆஹா
சென்னை: தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்என் ரவி பேசிய பேச்சுக்கு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் ஆர்என் ரவிக்கு தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் பதிலடி கொடுத்துள்ளார். இது தற்போது இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பாஜக சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்தது. இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஆளுநர் ஆர்என் ரவி பாராட்டினார்.

ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி பேசினார். அப்போது அவர் காசி தமிழ் சங்கமம் தொடர்பாகவும், தமிழ்நாடு பற்றி பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசியதாவது: ‛‛பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மிக குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. விடுதலை போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு பிரிவினைகள் நம்மிடையே இருந்தன. இப்போது நமது நாடு ஒரே பாரதம். பாரதம் என்பது ரிஷிகள், ஆன்மீக இலக்கியங்களால் உருவாக்கப்பட்டது.

தமிழகம் என சொல்வதே சரி
நமது பாரத தேசத்தை பிளவுபடுத்த, அழிப்பதற்கு ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பலர் கல்வியை கற்றிருக்கவே முடியாது. இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால் சிலர் அமெரிக்காவை போல பல தேசங்கள் இணைந்த நாடாக கருதுகின்றனர். அது தவறு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு
இந்நிலையில் தான் தமிழ்நாடு என்பதை தமிழகம் என சொல்வது சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்என் ரவி பேசியதற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட பிற கட்சியினர், தமிழ் அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ட்விட்டரில் தமிழ்நாடு என்பது டிரெண்டிங்கில் தொடர்ந்து இருந்து வருகிறது.

கமல்ஹாசன் பதிலடி
இந்நிலையில் தான் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 6 மொழிகளில் ‛தமிழ்நாடு' எனக்கூறி ஆளுநர் ஆர்என் ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அவர் தனது ட்விட்டர் பதிவில், தமிழில் ‛தமிழ்நாடு வாழ்க' எனவும், மலையளத்தில் ‛தமிழ்நாடு விஜயிக்கட்டும்' எனவும், தெலுங்கு மொழியில் ‛தமிழ்நாடு வர்த்திலாலி' எனவும், கன்னடத்தில் ‛தமிழ்நாட்டுக்கு ஜெயவாகலி' என்றும் இந்தியில் ‛தமிழ்நாடு ஜெய்ஹோ' எனவும் ஆங்கிலத்தில் ‛லாங் லிவ் தமிழ்நாடு‛ எனவும், லாங்லிவ் இந்தியா எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications