சோழர் கால வெண்கல சிலைகள், 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள்..சென்னையில் பறிமுதல்..எந்த கோவிலுக்கு சொந்தம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொன்மை வாய்ந்த 7 சோழர்கால வெண்கல சிலைகள், 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 பழங்கால தஞ்சை ஓவியங்களையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சென்னையில் பறிமுதல் செய்துள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியருக்கு சொந்தமான வீட்டில் இருந்து இந்த சிலைகளானது பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

தொன்மை வாய்ந்த 7 சோழர்கால வெண்கல சிலைகள், 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 பழங்கால தஞ்சை ஓவியங்களையும் ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் அவரது வீட்டில் வைத்துவிட்டு, வெளிநாட்டில் வசித்து வருவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினர் இன்று சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் இருந்த தொன்மை வாய்ந்த 7 சோழர்கால வெண்கல சிலைகள், 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 பழங்கால தஞ்சை ஓவியங்களையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

 வெளிநாடு வாழ் இந்தியர்

வெளிநாடு வாழ் இந்தியர்

கடந்த 2011ஆம் ஆண்டு வீட்டில் சிலைகள், ஓவியங்களை வைத்துவிட்டு அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

 எந்த கோவிலுக்கு சொந்தமானவை

எந்த கோவிலுக்கு சொந்தமானவை

சிலைகளை தனது பெற்றோர் வைத்திருந்ததாகவும், தனக்கு அதுகுறித்து விவரங்கள் தெரியாதும் என்றும் அந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் தெரிவித்திருக்கிறார். சிலைகளின் தொன்மை குறித்து தொல்லியல் துறையினர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானவை என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அந்த நபரிடம் விசாரணையானது தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆவணங்கள்

ஆவணங்கள்

அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியரை அழைத்து விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தற்பொழுது திட்டமிட்டுள்ளனர். அங்கு உள்ளவர்கள் கொடுக்கப்பட்ட காலகட்டத்தில் ஆவணங்கள் சமர்பிக்கப்பாடாததால் சோழர் காலத்து 7 வெண்கல சிலைகள் மற்றும் 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

 இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை

சிலைகளின் தன்மை குறித்து தொல்லியல் துறையினர் மூலம் விசாரணை நடத்தி இந்து அறநிலைய துறையினரிடம் பல்வேறு தகவல்களை பெற்று இந்த சிலையை ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+