தமிழில் பாஸ் செய்தால் மட்டுமே போலீஸ் ஆக முடியும்... சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைத் தொடர்ந்து காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைத் தொடர்ந்து காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே காலவராக முடியும் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். போலீஸ் என்றாலே கெத்துதான் என்று நினைக்கும் பல இளைஞர்களுக்கு காக்கிச்சட்டை போட வேண்டும் என்ற கனவில் இருப்பார்கள். அவர்களுக்காகவே விரைவில் முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளது.
தமிழக காவல் துறையில் நிலவும் காவலர் பற்றாக்குறை காரணமாக கூடுதல் பணிச்சுமையும் தொடர்ந்து இருந்து வருகிறது. தேவையான காவலர்களை தேர்வு செய்வதற்காக அவ்வப்போது சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் காரணமாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. போட்டி தேர்வுகள் மூலம் காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தல் நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப் 1 , குரூப் 2 மற்றும் 2ஏ , குரூப் 4, விஏஓ என பல்வேறு படிநிலைகளில் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப டி.என்.பி.எஸ். சி தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அரசுப்பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படுள்ளதாக தெரிவித்தது.

தமிழ் கட்டாயம்
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித்தாள் மட்டுமே தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்படிருக்கிறது. அதன்படி கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகிறது. தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது என்றும் அரசு தெரிவித்திருந்தது.

40 மதிப்பெண் கட்டாயம்
அதாவது 300 மதிப்பென்களுக்கு நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு பகுதி- அ எனக் கொள்குறி வகையில் தமிழ்மொழித் தாள் அமைக்கப்படும். இந்த பகுதி பகுதி- அ , அளவில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, பகுதி- ஆவில் எழுதிய இதர தாளும் மதிப்பீடு செய்யப்படும்.

கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு
இதுவரை டிஎன்பிஎஸ் சி தேர்வுகளில் மட்டுமே இருந்த இந்த கட்டாய தமிழ் தகுதித் தேர்வு தற்போது காவலர் தகுதித் தேர்விலும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், மருத்துவ பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக்கு குழுமம் உள்ளிட்ட மாநிலத்தின் இதர தெரிவு முகமைகளிலும் கட்டாய தமிழ் மொழித் தகுதி தேர்வினை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வந்தது.

சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
அதில் தற்போது காவலர் தகுதித் தேர்வில் தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சீருடை பணியாளார் தேர்வாணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே காலவராக முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் பாஸ் செய்தால் மட்டுமே காக்கிச்சட்டை போட முடியும்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications