எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி?
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும், நாளை எந்த தொகுதி என்பது அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 28 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. இன்னும் எந்தெந்த தொகுதிகளில் எந்தக் கட்சி போட்டியிடுகிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியிடவில்லை. ஏற்கனவே சிபிஐ, சிபிஎம், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தங்களின் விருப்ப பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சிறிய கட்சிகளான எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை, மஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மஜகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை எந்த தொகுதி என்பது தெரியும் என்று தமீமுன் அன்சாரி கூறினார். இதையடுத்து முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3 கட்சிகளும் எந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்ற அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரிகிறது. கருணாஸ் திருவாடனை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் தமீமுன் அன்சாரி நாகை தொகுதியிலும் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவருமே 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். இம்முறை திமுக சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகின்றனர். ஏற்கனவே திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், மமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
தற்போது எஸ்டிபிஐ, மஜக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்திருப்பதால், சிறுபான்மை மக்களின் வாக்குகளை திமுக முழுமையாக கைப்பற்ற தயாராகி வருகிறது. அதற்கேற்ப தொகுதி வாரியாக திமுகவும் பணியாற்ற தொடங்கி இருக்கிறது. இன்னொரு பக்கம் கருணாஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் மூலமாக முக்குலத்தோர் சமூக வாக்குகளை அறுவடை செய்யவும் தயாராகி வருகிறது.
-
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்? "அவருக்கு வேறு திட்டம் இருக்கு.." பியூஷ் கோயல் கொடுத்த விளக்கம்! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
அண்ணாமலை இனி மாநில அரசியலில் இல்லை.. பாஜக டாட்டா காட்டிவிட்டது.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார்.. அதிருப்தியில் தவெக! பின்னணியில் ராஜன் செல்லப்பா -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
தூத்துக்குடி, சேலம் ஆட்சியர்கள் மாற்றம்.. மதுரை காவல் ஆணையர் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications