சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரசவரவென குறையும் தினசரி கொரோனா.. இன்று வெறும் 480 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தில் வெறும் 480 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜன மாதம் கொரோனா 3ஆம் அலை உச்சம் தொட்ட நிலையில், அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஓமிக்ரான் அலை தமிழகத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு கிட்டதட்ட முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டு உள்ளது. கொரோனா இல்லாத தமிழகம் என்ற நிலையை நோக்கி மாநிலம் மெல்லச் சென்று கொண்டு இருக்கிறது.

உயிருக்கு பயந்து நாடு திரும்பும் மக்கள்..கொரோனா டெஸ்ட் எடுக்கனுமாம்.. அதிகாரிகள் அறிவிப்பால் “ஷாக்” உயிருக்கு பயந்து நாடு திரும்பும் மக்கள்..கொரோனா டெஸ்ட் எடுக்கனுமாம்.. அதிகாரிகள் அறிவிப்பால் “ஷாக்”

 தினசரி பாதிப்பு

தினசரி பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த ஜன. 22இல் தினசரி கொரோனா பாதிப்பு 30,700வரை சென்றது. அதன் பின்னர் குறையத் தொடங்கிய கொரோனா இன்று 500க்கு கீழ் குறைந்துள்ளது. இன்று மாநிலத்தில் 63 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் மலேசியாவில் இருந்து திரும்பிய ஒருவர் கேரளா, மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 480 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 34,48,568ஆக உயர்ந்துள்ளது.

 ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

தினசரி கொரோனா பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று 8,150ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று மேலும் குறைந்து 7,164ஆக குறைந்துள்ளது. அதேபோல ஒரே நாளில் மொத்தம் 1,464 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,03,402ஆக உயர்ந்துள்ளது.

 உயிரிழப்பு

உயிரிழப்பு

கொரோனா உயிரிழப்புகளும் கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. ஓமிக்ரான் அலை உச்சத்தில் இருந்த போது தினசரி கொரோனா உயிரிழப்புகள் 50 வரை சென்ற நிலையில், இன்று அது 2ஆக குறைந்துள்ளது. இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒருவரும் உயிரிழந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,002ஆக உயர்ந்துள்ளது.

 மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பார்க்கும் போது தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 126 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கோவையில் தினசரி பாதிப்பு 72 பேருக்கும் செங்கல்பட்டில் 55 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 50ஐ தாண்டவில்லை. ஓமிக்ரான் அலை ஏற்பட்ட சமயத்தில் 20 தாண்டிய பாசிட்டிவ் விகிதம் நேற்று 1க்கு கீழ் குறைந்தது. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2ஐ தாண்டவில்லை. மாநிலத்தில் சராசரி பாசிட்டிவ் விகிதம் 0.8ஆக குறைந்துள்ளது.

English summary
Tamilnadu active cases went below 7200: Tamilnadu Corona death count is in single digits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X