சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா நோயாளிகளுக்கு.. ரெம்டெசிவிர் பெற என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசு வழிகாட்டுதல் வெளியீடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரெம்டெசிவிர் மருந்தை ரெம்டெசிவிர் மருந்தைப் பெறுவதற்கான வழிமுறைகள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்காதீர்... சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் தினசரி மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்படுகிறது.

    துரைமுருகன் முன்மொழிய.. திமுக சட்டமன்ற குழுத் தலைவரானர் ஸ்டாலின்.. நாளை ஆளுநரை சந்திக்கிறார்துரைமுருகன் முன்மொழிய.. திமுக சட்டமன்ற குழுத் தலைவரானர் ஸ்டாலின்.. நாளை ஆளுநரை சந்திக்கிறார்

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 5% பேருக்குக் கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. மற்றவர்களுக்கு லேசான கொரோனா பாதிப்பு மட்டுமே ஏற்படுகிறது.

    ரெம்டெசிவிர்

    ரெம்டெசிவிர்

    தீவிர நுரையீரல் பாதிப்பு இருப்பவர்கள் ரெம்டெசிவிர் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்படுகிறது. மோசமான பாதிப்பு இருப்பவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து தேவை. இருப்பினும், லேசான கொரோனா பாதிப்பு உடையவர்களும் அச்சம் காரணமாக ரெம்டெசிவிர் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர்.

    ரெம்டெசிவிர் தட்டுப்பாடு

    ரெம்டெசிவிர் தட்டுப்பாடு

    மருத்துவர்களின் ஆலோசனையின்றி ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக் கொள்வது ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதனால் மோசமான பாதிப்பைக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்குத் தக்க நேரத்தில் ரெம்டெசிவிர் கிடைக்காத சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்தைப் பெறுவதற்கான வழிமுறைகள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

    தமிழக அரசு வழிகாட்டுதல்கள்

    அதன்படி நோயாளி முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். மூச்சு திணறல் பிரச்சனை காரணமாக ஆக்சிஜன் உதவி பெறுபவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் தேவைப்படும். அடுத்ததாக RT PCR சோதனையில் நோயாளிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். கொரோனால் பாதிப்பு உடைய அனைவருக்கும் ரெம்டெசிவிர் தேவையில்லை.

    சிடி ஸ்கேன் தேவை

    சிடி ஸ்கேன் தேவை

    நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் தேவை. தேவையின்றி ரெம்டெசிவிர் எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகளும் ஏற்படும் என்பதால் நுரையீரல் பாதிப்பு கண்டறிய மருத்துவர் ஆலோசனைப்படி சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும். அதன் பின்னர் நோயாளியின் ஆதர் அட்டை உள்ளிட்ட இதர தகவல்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும். இதற்கான தொகை கண்டிப்பாக ஆன்லைனிலேயே செலுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Protocol to get Remdesivir in TamilNadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X