Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் மின்வெட்டு வரும் ஆபத்து?.. 4 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு.. அரசுக்கு பெரும் சவால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனாவில் தொடங்கிய நிலக்கரி பற்றாக்குறை இந்தியாவையும் பாதித்துள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கு மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மட்டுமே உள்ளது. நிலக்கரி இல்லாவிட்டால் மின் உற்பத்தி இல்லாமல், மீண்டும் தமிழகத்தில் மின்வெட்டு தலைதூக்கும் ஆபத்து உள்ளது.

Recommended Video

    China-வை அச்சுறுத்தும் மின்சார பற்றாக்குறை.. India-விலும் பாதிப்பு வரும் அபாயம்

    வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்பட 5 அனல்மின் நிலையங்களில் இன்னும் 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு மட்டுமே உள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தினமும் நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது.அரசின் சொந்த அனல் மின் நிலைய உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஆறுதல் தரும் தகவலை வெளியிட்டார். ஆனால் நிலக்கரி கையிருப்பு குறைந்துவருவதால் மின் வெட்டு அபாயம் எழுந்துள்ளது.

    மின் உற்பத்தி என்பது பல்வேறு வழிகளில் செய்யப்பட்டாலும், பிரதானமாக இருப்பது அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது தான் பிரதானமாக உள்ளது. தமிழகத்தில் வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்பட 5 அனல்மின் நிலையங்களில் 4320 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை மின் உற்பத்தி, சூரிய சக்தி மின் உற்பத்தி, நீர் மின் நிலை மின் உற்பத்தி, கூடங்குளம் அணுமின் நிலைய மின் உற்பத்தி, வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவது என அரசு தமிழகத்திற்கு தேவையான சுமார் 12 ஆயிரம் மெகாவாட் (வேறுபடும்) மின்சாரம் பல்வேறு வழிகளில் கிடைக்கிறது.

    சீனாவில் பாதிப்பு

    சீனாவில் பாதிப்பு

    இந்நிலையில் அனல் மின்சார உற்பத்திக்கு மூலதனமாக விளங்கும் நிலக்கரிக்கான தேவை, சர்வதேச சந்தையில் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. சீனா அனல் மின் நிலையங்களையே மின்சாரத்திற்கு பிரதானமாக நம்பி இருக்கிறது. தற்போது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அங்கு கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அங்கு நிலவும் மின்வெட்டு பிரச்னை அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என தெரிகிறது,

    தமிழகத்தில் சரிவு

    தமிழகத்தில் சரிவு

    இதனால் சர்வதேச அளவில் நிலக்கரி சப்ளை செய்யும் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை பெறுவதற்கு சீனா பல்வேறு முயற்சிகளை செய்கிறது. இந்த காரணத்தால் தற்போது நிலக்கரி தேவை திடீரென அதிகரித்து அதன் விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது.
    சீனாவில் ஏற்பட்ட பிரச்சனை உலகின் பல்வேறு நாடுகளை பாதித்து இந்தியாவையும் தற்போது பாதித்துள்ளது. இதனால் தமிழகத்திலும் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்பட தமிழகத்தில் உள்ள 5 அனல்மின் நிலையங்களில் இன்னும் 4 அல்லது ஐந்து நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

    மின்சார வாரியம்

    மின்சார வாரியம்

    தற்போதைய நிலையில் தமிழக மின்சார வாரியம், வல்லூர் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையங்கள் நிலக்கரி சப்ளைக்காக நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்நிலையில் செப்டம்பர் மாதம் முதலே தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி சப்ளை பாதியாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    எவ்வளவு கையிருப்பு

    எவ்வளவு கையிருப்பு

    தமிழக அனல்மின் நிலையங்களுக்கு நாள் ஒன்றுக்கு 60,265 டன் நிலக்கரி தேவை என்ற நிலையில், மின்வாரியத்துக்கு 36,255 டன் மட்டுமே கிடைப்பதாக சொல்லப்படுகிறது. நேற்றைய (அக் 8) நிலவரப்படி 1.92 லட்சம் டன்கள் நிலக்கரி கையிருப்பு உள்ளதாம். இதனைக் கொண்டு அதிகபட்சமாக 4 நாட்கள் மட்டுமே சமாளிக்க இயலும் என்கிறார்கள். தூத்துக்குடியில் 2.6 நாட்கள் மட்டுமே இயங்கும் வகையில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. மேட்டூரில் உள்ள நிலக்கரியை வைத்து 3.4 நாட்களும், வடசென்னையில் 2.2 நாட்கள் மட்டுமே சமாளிக்க இயலும் என்கிறார்கள் . இந்த ஐந்து அனல்மின்நிலையங்களின் மொத்த மின் உற்பத்தி 4320 மெகா வாட் ஆகும்.

    மின்சாரம் வாங்குகிறது

    மின்சாரம் வாங்குகிறது

    தற்போது ஒரு யூனிட்டுக்கு 10 முதல் 15 ரூபாய் என்ற விலையில் ஒரு நாளைக்கு 20 மில்லியன் யூனிட் மின்சாரத்தை தமிழக மின்சார வாரியம் மின் எக்ஸ்சேஞ்சில் இருந்து வாங்கி சமாளித்து வருகிறது. தற்போது தமிழக நீர் மின் நிலைய உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி 12 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது. ஆறுகளில் நீர் வரத்து அதிகரிப்பால் ஓரளவு அதிகரித்துள்ளது. ஆனால் இது ஆறுதல் தரக்கூடியதாக இருந்தாலும் போதாது.

    தமிழக அரசு அழுத்தம்

    தமிழக அரசு அழுத்தம்

    நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் சுமார் 4320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியில் பாதி குறைந்தாலும் பெரும் பாதிப்பை தமிழகத்தில் ஏற்படுத்தும். இதனால் மின்வெட்டு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதை உணர்ந்தே தமிழக அரசு நிலக்கரி தேவைக்காக மத்திய நிலக்கரி துறையினருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனாலும் நிலைமை கொஞ்சம் சிக்கலாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

    அதிமுக கோரிக்கை

    அதிமுக கோரிக்கை


    இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் துணை தலைவரான ஒ.பன்னீர்செல்வம் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், நிலக்கரி கையிருப்பு அடுத்த நான்கு நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்ற நிலையில், இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி மத்திய அரசின் நிலக்கரித்துறை அமைச்சருடன் பேசி தமிழகத்துக்கு தேவையான நிலக்கரி விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டுமென என வலியுறுத்தினார்.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    மேலும் இப்பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காணும் வகையில் ஒடிசா மாநிலம் சந்திரபிலானி நிலக்கரி தொகுதியிலிருந்து நிலக்கரி எடுக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் அனுமதியை பெற தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு அளித்து அங்கு மேம்பாட்டு பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+