Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வறண்ட மார்ச்.. 150 ஆண்டுகளில் 2 முறைதான்.. மார்ச் 3இல் முக்கிய வானிலை நிகழ்வு- வெதர்மேன் போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முக்கியமான நிகழ்வு குறித்து வானிலை பதிவை போட வேண்டிய நேரம் வந்துவிட்டது என தமிழ்நாடு வெதர்மேன் புதிரோடு தனது ட்விட்டரில் போஸ்ட் போட்டுள்ளார்.

தென்கிழக்கு பருவமழை, வடகிழக்கு பருவமழைக் காலங்களில் இந்தியாவில் மழையை பெரும் மாநிலங்களுக்கான எச்சரிக்கைகளையும் அறிவிப்புகளையும் வானிலை மையங்கள் அறிவித்தாலும் தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜானும் வழங்கி வருகிறார்.

இவரது வெதர் போஸ்ட்டை பார்க்க ஏராளமானோர் ஆர்வமுடன் காத்திருப்பார்கள். இவர் போடும் போஸ்ட்கள் பொதுவாக அச்சுறுத்தும் வகையில் இருக்காது என்பதால் அவரது பதிவுகளை விரும்பி படிப்பார்கள்.

நவம்பர் மாதம் மழை

நவம்பர் மாதம் மழை

அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தையே புரட்டி போட்ட மழை, வெள்ளம் குறித்து அப்டேட்டுகளை வழங்கி வந்தார். அதன் பிறகு ஒரு நாள் யாரும் எதிர்பார்க்காத வேளையில் பெய்த பேய் மழை குறித்து அலர்ட் செய்யாததற்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். இவர் தற்போது இரு மாதங்கள் கழித்து புதிய வெதர் போஸ்ட்டை போட்டுள்ளார்.

ட்விட்டர் பதிவு

ட்விட்டர் பதிவு

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நீண்ட காலம் கழித்து முக்கியமான நிகழ்வு குறித்து வானிலை பதிவு போடுவதற்கான நேரம் வந்துவிட்டது. கடல் மற்றும் வளி மண்டல த்தில் உள்ள ராஸ்பி அலைகள் பூமியின் சுழற்சியால் நிகழ்கிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அரிதான நிகழ்வு

அரிதான நிகழ்வு

தமிழகத்தில் மிகவும் அரிதான நிகழ்வாக மழை பெய்ய போகிறது. வரும் மார்ச் 3 முதல் 6 ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் மார்ச் மாதம் வறண்ட வானிலை காலம் ஆகும். கடந்த 150 ஆண்டுகளில் வெறும் இரு ஆண்டுகளில் மட்டுமே தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.

 மார்ச் மாதம் இரு முறை வெளுத்த மழை

மார்ச் மாதம் இரு முறை வெளுத்த மழை

அதன்படி கடந்த 1984 ஆம் ஆண்டும் 2008ஆம் ஆண்டும் மார்ச் மாதம் அதாவது கோடைக் காலத்தில் கனமழை பெய்துள்ளது என போஸ்ட் போட்டுள்ளார. இரவு நேரத்தில் சில இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவினாலும் பகல் நேரங்களில் புழுக்கம் அதிகமாகவே இருக்கிறது. வெதர்மேனின் இந்த போஸ்ட்டை பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+