சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாழ்நாளில் மறக்க முடியாத சென்னை மழை.. இதுபோன்ற அடைமழையை இனி எப்போது பார்ப்போம்?.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு சென்னையில் மழை பெய்துள்ளது என்றும் நாளை வட கடலோர பகுதிகள் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தென் தமிழகம் ஆகியவற்றில் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    5 மாவட்டங்களில் அதிரடி காட்டும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

    நேற்று சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு அதுவும் ஜனவரி மாதத்தில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு பதிவை போட்டுள்ளார்.

    அதில் அவர் கூறுகையில், 15 மணி நேரத்தில் எத்தனை அதிகபட்சமான மழை பெய்துள்ளது என்பதை பாருங்கள் இந்த மாதம் நவம்பரோ அல்லது டிசம்பரோ அல்ல. இது ஜனவரி மாதம். இது போன்று இன்னொரு மழை சென்னையில் பெய்யும் வரை நான் உயிருடன் இருப்பேனா என தெரியவில்லை.

    புயல் காலம் போல் ஜனவரியில் அரிதான அடைமழை.. சென்னையில் 14 மணி நேரமாக வெளுத்தெடுக்கும் மழை புயல் காலம் போல் ஜனவரியில் அரிதான அடைமழை.. சென்னையில் 14 மணி நேரமாக வெளுத்தெடுக்கும் மழை

    எங்கு எவ்வளவு

    எங்கு எவ்வளவு

    100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஜனவரி மாதத்தில் பெய்த மழையில் நேற்று பெய்தது சிறப்பானதாகும். கிண்டியில் 159 மி.மீ. மழையும் கே கே நகரில் 148, பெரம்பூரில் 139.6, அயனாவரத்தில் 139.4, தரமணியில் 174. 5 மி.மீ மழையும் பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 145 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் சென்னையில் ஜனவரி மாதம் 24 மணி நேர்த்தில் பெய்த மழை அளவுகளை பார்ப்போம்.

    இன்று எவ்வளவு

    இன்று எவ்வளவு

    ஜனவரி மாதம் 15, 1915 ஆம் ஆண்டு 212.9 மி.மீ மழையும் 1920 ஆம் ஆண்டு 99.8 மி.மீ. மழையும் 1903-ஆம் ஆண்டு 82.8 மி.மீ. மழையும் 2021 ஆம் ஆண்டு 6ஆம் தேதி 82 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இன்றும் நாளையும் மேற்கு தமிழகம், உள் தமிழகத்தில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

    எங்கெங்கு மழை

    எங்கெங்கு மழை

    கிழக்கு காற்று தமிழகத்தின் உள்மாவட்டங்களை நோக்கி வீசும். இதனால் சென்னா முதல் டெல்டா வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று இரவு முதல் உள் மாவட்டங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரியில் மழை பெய்யும். ஜனவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை ஜனவரி மாதம் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

    30 சதவீதம்

    30 சதவீதம்

    எந்தெந்த மாவட்டங்கள் என கண்டறிய முடியவில்லை. ஆனால் இன்று தமிழகத்தில் மழை தொடரும். நேற்று போல் இன்றும் சென்னையில் மழை பெய்யுமா என்றால் நிச்சயம் இல்லை. நேற்று பெய்த மழையில் 30 சதவீதம் மழை அடுத்த இரு நாட்களில் பெய்தால் நன்றாக இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Weatherman Pradeep John says that a rare spell to remember for lifetime in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X