கண்டுக்காதீங்க.. இப்போதைக்கு பெரிசா பிரச்சினை இல்லை.. சென்னைவாசிகளுக்கு ஆறுதல் தந்த வெதர்மேன்!
சென்னை: புதிய காற்றழுத்தம் வட தமிழகத்திற்கு வந்தாலும் சென்னைக்கு பெரியதாக மழை ஏதும் இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த காற்றழுத்தம் புயலாக மாறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இருந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பரவலாக மிக கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கி, குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

அந்தமான்
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் கணித்தது. அதன்படி 13 ஆம் தேதி அந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. ஆனால் இந்த காற்றழுத்தம் வரும் 18 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தீவிரமடையும் என சொல்லப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
இது இரு வேறு விதமாக பயணிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார். முதலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி புயலாக மாறி, ஒரே தீவிரத்தன்மையுடன் இருந்தால் அது மேற்பகுதியில் நகர்ந்து மத்திய மற்றும் வடக்கு ஆந்திராவின் மேற்கு, வடமேற்கு திசையில் உயர்ந்த காற்றால் நகரும். இன்னொன்று அந்த குறைந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாகவோ புயலாகவோ மாறினால், அது குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்து குறைந்த காற்றால் தெற்கு ஆந்திராவுக்கோ அல்லது வட தமிழகத்திற்கோ செல்லும் என தெரிவித்திருந்தார்.

வெள்ளம்
வடதமிழகம் என்றவுடன் ஏற்கெனவே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு ஒரு வாரம் ஆகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையில் உள்ளதால் சென்னை மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னைக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயத்தையும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ரேடாரை பொருத்தவரை புதிய காற்றழுத்தம் உருவானதை சுற்றியுள்ள பகுதிகள் பச்சை நிறமாகவே இருக்கிறது.

நெல்லூர்- காவாலி
தெற்கு ஆந்திராதான் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. நெல்லூர்- காவாலி இடையே வடசென்னை அருகே மேகக் கூட்டங்கள் குவிந்துள்ளன. இவை வடதமிழகத்தின் பக்கம் நகர்ந்து வந்தால் தற்போதைய சூழலில் சென்னையில் மிகப் பெரிய மழை எல்லாம் இருக்காது. வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் காற்று குவிதலால் மழை மேகங்கள் வடமேற்கு பக்கம் செல்லும். இதில் மேலும் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே தற்போதைய சூழலில் சென்னைக்கு பெரிய மழை என்பதில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications